sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/பக்கவாத்தியம்/ 'அதெல்லாம் ஒரு காலமும் நடக்காது!'

 'அதெல்லாம் ஒரு காலமும் நடக்காது!'

 'அதெல்லாம் ஒரு காலமும் நடக்காது!'


PUBLISHED ON : ஏப் 23, 2026 12:40 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 23, 2026 12:40 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் தொகுதியில், அமைச்சர் சாமிநாதனுக்கு, அமைச்சர் சக்கரபாணி சமீபத்தில் ஓட்டு சேகரித்தார்.

பிரசார வாகனத்தை விட்டு இறங்கி வந்து, முதியவர்களை கையெடுத்து கும்பிட்டு, ஆசீர்வாதம் வாங்கிய அமைச்சர் சாமிநாதன், அங்கிருந்த ஒருவரிடம் சக்கரபாணியை சு ட்டிக்காட்டி, 'இவர் யாருன்னு தெரியுதா?' என கேட்டார்.

புருவத்தை உயர்த்தி சிலர் யோசிக்க, 'இவரு பேரு சக்கரபாணி. ரேஷன் கடையில அரிசி, பருப்பு, சர்க்கரையெல்லாம் போடுறாங்கல்ல... அந்த துறை அமைச்சர் இவர் தான்' என, அறிமுகப்படுத்தி வைத்தார்.

கையை உயர்த்தி, சக்கரபாணிக்கு பெரிய கூம்பிடு ஒன்றை போட்ட முதியவர்கள், அவருடன் நின்று கும்பலாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

அவர்கள் கிளம்பியதும், தொண்டர் ஒருவர், 'ரேஷன்ல நல்ல அரிசியா போடுங்கன்னு சொல்லாம போயிட்டோமே...' என முணுமுணுக்க, 'அதெல்லாம் ஒருக்காலமும் நடக்காது...' என சக தொண்டர் கூற, அங்கு சிரிப்பலை எழுந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us