PUBLISHED ON : டிச 27, 2024 12:00 AM

சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் மண்டலக்குழு கூட்டம், தி.மு.க.,வைச் சேர்ந்த மண்டலக்குழு தலைவர் தனியரசு தலைமையில் நடந்தது. மண்டல உதவி கமிஷனர் புருஷோத்தமன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதில், 7வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் கார்த்திக், 'என் வார்டில், வெற்றி விநாயகர் நகர் பகுதியில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை எப்போது அகற்றுவீர்கள்?' என, கேள்வி எழுப்பினார்.
அதற்கு உதவி கமிஷனர், 'அது மருத்துவக் கழிவு இல்லை என, மாசு கட்டுப்பாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது. அங்கு சுத்தம் செய்துவிட்டு, மழைநீர் தேங்கும் வகையில், குளம் உருவாக்கப்பட உள்ளது' என, பதிலளித்தார். 'அந்த பணியை எப்போது செய்வீர்கள்?' என, கவுன்சிலர் மீண்டும் கேள்வி எழுப்ப, உதவி கமிஷனர் பழைய பதிலையே திரும்ப சொன்னார்.
சக கவுன்சிலர் ஒருவர், 'இவரை மாதிரி அதிகாரிகள்தான் அரசுக்கு தேவை... குளம் வெட்டிய மாதிரிதான்...' என, முணுமுணுத்தவாறு கிளம்பினார்.

