PUBLISHED ON : அக் 02, 2024 12:00 AM

திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில் நடந்த அண்ணாதுரை பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில், அக்கட்சி மாவட்ட செயலரும், பொள்ளாச்சிதொகுதி எம்.எல்.ஏ.,வுமான ஜெயராமன் பங்கேற்றார்.
அப்போது பேசுகையில், 'அ.தி.மு.க., எப்பவும் சொக்கத் தங்கம்; அது காய்ச்சி காய்ச்சி ஊற்றும் போது தான் சுத்தமாகும். அதேபோல் நமக்கு அழிவே இல்லை. எம்.ஜி.ஆர்., கட்சி துவக்கி, கொடி அறிமுகம் செய்த நேரம் சுக்கிர திசை. நமக்கு எப்போதும் வீழ்ச்சியில்லை. ஒரு அடி சரிந்தால், 100 அடி உயர்வு கிடைக்கும். ஏழை மக்களுக்காக அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமரும் நாள், வெகு தொலைவில் இல்லை' என்றார்.
கட்சி நிர்வாகி ஒருவர், 'இப்படி ஏதாச்சும் பேசி, தொண்டர்கள் மனசை தேத்தி விடுங்க... இல்லைன்னா கட்சிக்கு சந்திராஷ்டமம் தான்...' என முணுமுணுக்க, அருகில் இருந்த சக நிர்வாகிகள், அவரை முறைத்து பார்த்தபடி நடந்தனர்.

