sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/பக்கவாத்தியம்/ 'இதை சிந்திச்சா நல்லாயிருக்கும்!'

 'இதை சிந்திச்சா நல்லாயிருக்கும்!'

 'இதை சிந்திச்சா நல்லாயிருக்கும்!'


PUBLISHED ON : ஏப் 28, 2026 01:02 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 28, 2026 01:02 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தி.மு.க., மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவின் மகன் ராகேஷ் ரங்கநாதனின் 25வது பிறந்த நாளை ஒட்டி, ராகேஷ் அறக்கட்டளை மற்றும் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நுாலகம் இணைந்து, நீதி மற்றும் சமத்துவம் குறித்த சொற்பொழிவு, சென்னை வள்ளுவர் கோட்டம் அரங்கில் நடந்தது.

இதில், உச்ச நீதிமன்ற நீதிபதி அபய் ஸ்ரீனிவாஸ் ஓகா, சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அக்பர் அலி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

நீதிபதி அபய் ஸ்ரீனிவாஸ் ஓகா பேசுகையில், 'சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் விதிகள் மீறப்படுகின்றன. இதனால், மக்களின் காதுகளிலும், மூளையிலும் எவ்வளவு அதிக பாதிப்பு ஏற்படும் என்பதை, நாம் கற்பனை செய்து பார்க்க முடியாது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நாட்டின் முன்னேற்றத்திற்கு முக்கியம்' என்றார்.

வழக்கறிஞர் ஒருவர், 'வாஸ்தவம் தான்... ஆனா, தொழில் வளர்ச்சி என்று சொல்லி, மரங்களை வெட்டி தள்ளுறவங்க, இதை எல்லாம் சிந்திச்சா நல்லாயிருக்கும்' எனக் கூற, சக வக்கீல்கள் ஆமோதித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us