தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/பக்கவாத்தியம்/ 'அமைச்சர் சமாளிக்கிறாருப்பா...!'

 'அமைச்சர் சமாளிக்கிறாருப்பா...!'

 'அமைச்சர் சமாளிக்கிறாருப்பா...!'

3


PUBLISHED ON : ஏப் 19, 2026 01:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 19, 2026 01:00 AM

3


3
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தொகுதி, தி.மு.க., வேட்பாளரான, அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் வெள்ளகோட்டை பகுதியில் சமீபத்தில் பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசுகையில், 'தி.மு.க.,வில் பெண்களுக்கான திட்டங்கள் தான் அதிகம் உள்ளன. மகளிர் உரிமைத்தொகை உங்களுக்குத்தான் வழங்கப்பட்டுள்ளது; ஆண்களுக்கு இல்லை. அவர்களுக்கு கொடுத்தால், அவர்கள் எந்த கடைக்குச் செல்வர் என்று உங்களுக்குத் தெரியும்' என்றதும், அங்கிருந்த பெண்கள், 'டாஸ்மாக் கடைக்கு செல்வர்' என்று, கோரசாக கூறினர்.

உடனே சுதாரித்துக் கொண்ட அமைச்சர், 'நான் அப்படி சொல்ல வரவில்லை; டீக்கடைக்கு செல்வர் என்று சொல்ல வந்தேன்' என்றார்.

இதை கேட்ட ஆண் தொண்டர் ஒருவர், 'நம்ம மனசு நோகக் கூடாதுன்னு, அமைச்சர் சமாளிக்கிறாருப்பா...' என கூற, சக தொண்டர்கள் சிரித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us