/
தினம் தினம்
/
பக்கவாத்தியம்
/
'கூடுதல் சீட்டுக்காக மிரட்டுறாரோ?'
/
'கூடுதல் சீட்டுக்காக மிரட்டுறாரோ?'
PUBLISHED ON : நவ 04, 2025 12:00 AM

தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில செயற்குழு கூட்டம், அதன் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ., தலைமையில், கடலுாரில் நடந்தது.
பின், வேல்முருகன் அளித்த பேட்டியில், 'ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை தொடர்பாக, சர்வதேச நீதி விசாரணை நடத்த வலியுறுத்தி, தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என, முதல்வர் ஸ்டாலினிடம் நான்கரை ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறேன்.
'ஆனால், தீர்மானம் நிறைவேற்ற முதல்வர் ஸ்டாலின் மறுக்கிறார். கடைசியாக கேட்டபோது, ஜனவரியில் நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்துள்ளார். இத்தீர்மானம் தொடர்பாக, மத்திய அரசுக்கு அழுத்தம் தரவில்லை எனில், தி.மு.க., கூட்டணி குறித்து மீண்டும் செயற்குழு, பொதுக்குழுவை கூட்டி முடிவு செய்வோம்...' என்றார்.
இதை கேட்ட நிருபர் ஒருவர், 'இப்படி எல்லாம்மிரட்டினால், கூடுதல் சீட்கள் கிடைக்கும்னு நினைக்கிறாரோ...?' என முணுமுணுக்க, சக நிருபர்கள் ஆமோதித்தபடியே கலைந்தனர்.

