PUBLISHED ON : ஆக 11, 2025 12:00 AM

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், அரியலுார் மாவட்டம் செந்துறையில், பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், 'இந்தியாவில் மற்ற மாநிலங்களின் வளர்ச்சி விகிதம், 6.5 சதவீதமாக இருக்கும் நிலையில், தமிழகம் இரட்டிப்பு வளர்ச்சி பெற்றுள்ளது. இந்த இரட்டை இலக்க வளர்ச்சி, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் வெளிப்பட்டது. மீண்டும் தற்போது தான், இரட்டை இலக்க வளர்ச்சியை பெற்றுள்ளோம்.
'மத்திய அரசு வெளியிட்டுள்ள மாநிலங்களின் வளர்ச்சி பட்டியலில், கண்ணுக்கு எட்டாத துாரத்தில் குஜராத் உள்ளது. குஜராத் மாடல் என்பது சமூக வலைதளங்கள் வாயிலாக பொய்யாக உருவாக்கப்பட்டது. தற்போது, உண்மை நிலவரம் வெளிப்பட் டுள்ளது. திராவிட மாடலை பார்த்து, மற்ற மாநிலங்கள் பின்பற்றும் நிலை தான் இருக்கிறது...' என்றார்.
இதை கேட்ட மூத்த நிருபர் ஒருவர், 'போக்குவரத்து துறையை விட்டுட்டு, நிதியமைச்சர் மாதிரி பேசுறாரே...' என முணுமுணுக்க, சக நிருபர்கள் ஆமோதித்தபடியே கலைந்தனர்.