PUBLISHED ON : அக் 25, 2026 12:00 AM

பா.ஜ., தமிழக முன்னாள் தலைவர் அண்ணாமலை தொடங்கியுள்ள, 'வீ த லீடர்ஸ்' என்ற அமைப்பின் பொதுச்செயலர் கரு.நாகராஜன் சமீபத்தில் கிருஷ்ணகிரி வந்தார்.
அவர் அளித்த பேட்டியில், 'தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு குறைவாக உள்ளது. நாட்டில் அதிக, 'போக்சோ' வழக்குகள் பதிவாகும் மாநிலமாக தமிழகம் உள்ளது. ஒரு நாள் மழைக்கே ஒட்டுமொத்த சென்னையும் ஸ்தம்பித்துள்ளது. கடந்த தி.மு.க., போலவே, த.வெ.க., ஆட்சியும் உள்ளது.
'அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, மக்களை வாட்டுகிறது. அரிசி விலையை கட்டுப்படுத்த உருப்படியான திட்டங்களை வகுக்காமல், ரேஷன் கடைகளில் 30 ரூபாய்க்கு அரிசி வழங்கப்படும் என அறிவிக்கின்றனர்' என்றார்.
இதை கேட்ட நிருபர் ஒருவர், '30 ரூபாய்க்கு சன்ன ரக அரிசி வழங்குறதை எல்லாரும் பாராட்டுறாங்க... இவர் விமர்சிக்கிறாரே' என்றார். மற்றொரு நிருபர், 'அந்த அரிசியை இவர் வாங்கி சாப்பிட்டிருக்க மாட்டார் போலும்' என்றபடியே நடையை கட்டினார்.
