PUBLISHED ON : டிச 10, 2024 12:00 AM

சென்னை பூந்தமல்லி நகராட்சி கூட்டம், தி.மு.க.,வைச் சேர்ந்த நகராட்சி தலைவர் காஞ்சனா தலைமையில் நடந்தது; கமிஷனர், அனைத்து கட்சி கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், ஏழாவது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் ரவிச்சந்திரன் பேசுகையில், 'நான் எதிர்க்கட்சி என்பதால், முதல்வரின் தனிப் பிரிவில் இருந்து, நகராட்சியில் ஒவ்வொரு பணிக்கும் எவ்வளவு லஞ்சம்வாங்குகின்றனர் என, என்னிடம் கேட்டனர்' என்றார். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டு, ஆளுங்கட்சிகவுன்சிலர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இதை பார்த்து ஆவேசமடைந்த நகராட்சி தலைவர், 'கவுன்சிலர்களுக்கு ரத்தக் கொதிப்பு வந்து விட்டது; எல்லாருக்கும் மாத்திரை கொடுங்கள்...' என்றார். இதைக் கேட்ட அதிகாரி ஒருவர், 'கமிஷன் பணத்தை கரெக்டா கொடுங்க... அப்புறம் ஏன் கவுன்சிலர்கள் கொதிக்க போறாங்க... தலைவரம்மாவுக்கு இது தெரியலையே...' என, முணுமுணுத்தவாறு நடந்தார்.

