PUBLISHED ON : ஆக 24, 2025 12:00 AM

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் அழகிரி, பெரம்பலுாரில் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், 'பீஹாரில், 65 லட்சம் மக் களுக்கு ஓட் டுரிமை இல்லை என்று, ஒரே இரவில் தேர்தல் ஆணையம் சொல்லிவிட்டது. இது எப்படி நியாயமாகும். அவர்கள் இந்திய குடிமக்கள்; கடந்த தேர்தலில் ஓட்டளித்து இருக்கின்றனர். அவர்களிடம் எல்லா ஆவணங்களும் உள்ளன.
'அவர்களுக்கு தேர்தலில் ஓட்டளிக்கிற உரிமை இல்லை என்று சொன்னால், இந்த ஜனநாயகம் எங்கே போகிறது என்ற அச்சம் எழுகிறது. அடுத்ததாக ஓட்டளிக்கிற உரிமையே இல்லை என்றால், நீங்கள் தேசத்தை விட்டு வெளியேறுங்கள் என்றும் சொல்வர்.
'இதை எதிர்த்து தான் ராகுல் போராடுகிறார். இந்தியா முழுதும் அனைத்து ஜனநாயகவாதிகளும் ராகுல் கருத்துக்கு பக்கபலமாக இருக்கின்றனர்...' என்றார்.
மூத்த நிருபர் ஒருவர், 'எமர்ஜென்சியை அமல்படுத்திய இவங்க, ஜனநாயகம் பத்தி பேசுறது தான் ஆச்சரியமா இருக்கு...' என முணுமுணுக்க, சக நிருபர்கள் சத்தமின்றி சிரித்தனர்.