PUBLISHED ON : செப் 23, 2026 12:00 AM

மதுரையில் அ.தி.மு.க., சார்பில், சமீபத்தில் பொதுக் கூட்டம் நடந்தது.
இதில், முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு பேசுகையில், 'முந்தைய பொம்மை முதல்வர் ஸ்டாலின் ஆட்சியை விட, 'டம்மி' முதல்வர் விஜயின் ஆட்சி மோசமாக இருக்கிறது. எங்கள், 'மம்மி' ஜெயலலிதா ஆட்சி எப்படி இருந்தது...? தற்போதைய முதல்வர் விஜய், சந்தன கடத்தல் வீரப்பனை சுட்டுப் பிடித்தாரா; சட்டம் - ஒழுங்கை பேணி காத்தாரா?' என, காட்டமாக பல கேள்விகளை எழுப்பினார்.
இதை பார்த்த மூத்த நிருபர் ஒருவர், 'என்னப்பா இது... வீரபாண்டிய கட்டபொம்மன் படத்துல, நாற்று நட்டாயா, களை பறித்தாயான்னு சிவாஜி கணேசன் கேட்ட மாதிரி, இவரும் முதல்வர் விஜயை பார்த்து கேள்விகளா அடுக்குறாரே' என, 'கமென்ட்' அடித்தார்.
அருகில் இருந்த சக நிருபரோ, 'இவர் எப்படி எல்லாம் கேள்விகள் கேட்டாலும், இவரை மதிச்சு த.வெ.க.,வினர் பதில் தருவாங்களா என்பது சந்தேகம் தான் பா...' என்றபடியே அங்கிருந்து நகர்ந்தார்.
