PUBLISHED ON : ஏப் 24, 2024 12:00 AM

சிவகங்கையில், காங்கிரசை சேர்ந்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், 'தமிழக முதல்வர் ஸ்டாலின், அரசின் திட்டங்கள், வளர்ச்சி பணிகளை மிக வேகமாக மக்களிடம் எடுத்துச் சென்றார். ஆனால், காங்., வேட்பாளர்கள் சிலர், ராகுல் பாத யாத்திரையில் அறிவித்த திட்டங்களை பற்றி மக்களிடம் எடுத்துச் செல்லவில்லை. மேலும், காங்., அரசின் சாதனையை கூறி ஓட்டு சேகரிக்கவில்லை. ஜாதி, மத ரீதியில் இந்த தொகுதியில் ஓட்டு சேகரித்தனர். ஓட்டு எண்ணிய பின் தேர்தலின் நிலை தெரிய வரும்' என்றார்.
மூத்த நிருபர் ஒருவர், 'சில காங்கிரஸ் வேட்பாளர்கள்னு சிவகங்கை வேட்பாளரான சிதம்பரம் மகன் கார்த்தியை தான் சொல்றாரு... அவரது வெற்றியில் இவருக்கு நம்பிக்கை இல்லையோ...' என, முணுமுணுக்க, மற்றொரு நிருபர், 'அதை தான் நாசுக்கா சொல்றார்...' என, 'கமென்ட்' அடித்து சிரித்தார்.

