PUBLISHED ON : ஏப் 08, 2024 12:00 AM

காஞ்சிபுரம் லோக்சபா தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகரை ஆதரித்து, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா, காஞ்சிபுரத்தில் ஓட்டு சேகரித்தார்.
அப்போது, கூடியிருந்த கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை பார்த்து, 'நம் கூட்டணி வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தில் ஓட்டு போடுவீர்களா... நீங்கள் போடுவீர்களா...' என, ஒவ்வொரு திசையாக திரும்பி பார்த்து கேள்வி கேட்டு, பதில் பெற்றார்.
அ.தி.மு.க.,வின், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இந்த பாணியில் தான் பிரசாரம் செய்வார். அவரை பின்பற்றி, பிரேமலதா கேள்விகள் கேட்டு, பொதுமக்களிடம் இருந்து பதில் பெற்றதால், அ.தி.மு.க., தொண்டர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.
பார்வையாளர் ஒருவர், 'ஜெயலலிதா பாணியில் இவங்க பிரசாரம் பண்றதெல்லாம் சரி... மக்கள் ஓட்டு போடணுமே...' என, முணுமுணுக்க, மற்றொருவர், 'மக்கள் மனசுல இடம் பிடிச்சிட்டா, ஓட்டு மாறவே மாறாது...' என, பேசியபடி நடந்தார்.

