sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/இதே நாளில் அன்று/ இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று


PUBLISHED ON : ஆக 28, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 28, 2025 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆகஸ்ட் 28, 1934

சென்னையில், கர்நாடக இசை கலைஞர் பார்த்தசாரதி - லட்சுமியின் மகளாக, 1934ல் இதே நாளில் பிறந்தவர் ஏ.பி.கோமளா.

இவர், தந்தையிடம் கர்நாட க சங்கீதம் கற்று, சிறுவயதிலேயே வானொலி கலைஞரானார். தெலுங்கை தாய்மொழியாக கொண்டிருந்தாலும், தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் மெல்லிசை பாடல்களை பாடினார். பின்னணி பாடகி கே.வி.ஜானகி உதவியுடன், சி.ஆர்.சுப்புராமன், எஸ்.எம்.சுப்பையா நாயுடு ஆகியோர் இசையமைத்த, வேலைக்காரி திரைப்படத்தில், 'உலகம் பலவிதம்' என்ற பாடலை பாடி, பின்னணி பாடகியானார்.

விஜயகுமாரி படத்தில், வைஜெயந்தி மாலாவுக்காக இவர் பாடிய, 'லாலு லாலு' என்ற பாடல் புகழ் பெற்றது. தொடர்ந்து, தங்கப்பதுமை, தங்கமலை ரகசியம், கள்வனின் காதலி, உத்தம புத்திரன் உள்ளிட்ட பல படங்களில் பாடினார்.

இவர் பாடிய, 'சர்க்கரை பந்தலில், மாதா பிதா குரு தெய்வம், முத்தே பவளமே' உள்ளிட்ட பாடல்கள் இன்றும் இனிக்கும். திரையில் பின்னணி பாடல் அறிமுகமான காலத்தில் திரையுலகில் நுழைந்து, 1970 வரை, தென்மாநில மொழி படங்களில் பின்னணி பாடகியாக ஜொலித்தார்.

தமிழக அரசின், 'கலைமாமணி' உள்ளிட்ட விருதுகள் பெற்றவர், தன், 89வது வயதில், 2024, ஏப்ரல் 26ல் மறைந்தார்.

இவரது பிறந்த தினம் இன்று!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us