PUBLISHED ON : அக் 30, 2026 12:00 AM

அக்டோபர் 30-: குஜராத் மாநிலம், டங்காரா பகுதியில் கர்ஷன்ஜி லால்ஜி திவாரி – யசோதாபாய் தம்பதியின் மகனாக, 1824 பிப்ரவரி 12-ல் பிறந்தவர், மூல்சங்கர்.
சிறு வயதிலேயே சமஸ்கிருதம், வேதங்களை கற்றார். பின், வீட்டை விட்டு வெளியேறி, மதுராவில் சுவாமி விரஜானந்தரிடம் வேதங்களை கற்றார். சன்னியாச மரபில் தீட்சை பெற்று, தயானந்த சரஸ்வதி சுவாமி ஆனார்.
மூடநம்பிக்கைகள், உருவ வழிபாடு, குழந்தை திருமணம், பிறப்பின் அடிப்படையிலான ஜாதி பாகுபாடுகளை எதிர்த்தார். பெண் கல்வி, விதவை மறுமணம் உள்ளிட்ட சமூக சீர்திருத்தங்களை ஆதரித்தார்.
‘வேதங்களுக்கு திரும்புவோம்’ என்ற கொள்கையை முன்னிறுத்திய இவர், 1875ல் மும்பையில் ஆரிய சமாஜத்தை நிறுவினார். ‘சுயராஜ்யம் எனது பிறப்புரிமை’ என்ற முழக்கத்திற்கு அடித்தளம் அமைத்தவர்களில் ஒருவரான இவர், ‘சத்யார்த்த பிரகாஷ்’ உள்ளிட்ட பல நுால்களை எழுதி, ஆன்மிக மற்றும் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
இந்தியாவின் சமூக, சமய சீர்திருத்த வரலாற்றில் முக்கிய இடம்பிடித்த இவர், 1883, அக்டோபர் 30-ல், தன் 59வது வயதில் மறைந்தார்.
இவரது நினைவு தினம் இன்று!
