தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இதே நாளில் அன்று/இதே நாளில் அன்று: அக். 24

இதே நாளில் அன்று: அக். 24

இதே நாளில் அன்று: அக். 24


PUBLISHED ON : அக் 24, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 24, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அக்டோபர் 24, 1921

தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கிருஷ்ணசுவாமி அய்யர் – ஞானாம்பாள் தம்பதியின் மகனாக, கர்நாடக மாநிலம் மைசூரில், 1921ல் இதே நாளில் பிறந்தவர், ராசிபுரம் கிருஷ்ணசுவாமி லட்சுமண் எனும் ஆர்.கே.லட்சுமண்.

பிரபல எழுத்தாளர் ஆர்.கே.நாராயணின் தம்பியான இவர், சிறு வயது முதலே ஓவியத்தில் ஆர்வம் கொண்டிருந்தார். மைசூரில் பள்ளி, கல்லுாரி படிப்பை முடித்தவர், 1947ல் மும்பையின், ‘பிரீ பிரஸ் ஜர்னல்’ நாளிதழில், முழுநேர கேலிச்சித்திர ஓவியராக பணியை தொடங்கினார்.

தன் துாரிகை மூலம் இந்திய அரசியல் மற்றும் சமூக எதார்த்தங்களை நகைச்சுவையுடன் வெளிப்படுத்துவதில் வல்லவராக திகழ்ந்தார். ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளிதழில் இணைந்து, ‘யூ செட் இட்’ பகுதியில் இடம்பெற்ற, ‘காமன் மேன்’ பாத்திரம் மூலம் புகழ் பெற்றார்.

அரசியல் நிகழ்வுகளையும், சாமானிய மக்களின் பிரச்னைகளையும் நகைச்சுவை, நையாண்டியுடன் சித்தரித்தார். 1973ல் பத்ம பூஷண், 1984ல் பிலிப்பைன்ஸ் நாட்டின் ராமன் மகசேசே, 2005ல் பத்ம விபூஷண் உள்ளிட்ட விருதுகளை பெற்ற இவர், தன் 93வது வயதில், 2015 ஜனவரி 26ல் மறைந்தார்.

இவரது பிறந்த தினம் இன்று!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us