sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/இதே நாளில் அன்று/ இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று


PUBLISHED ON : டிச 14, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 14, 2024 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டிசம்பர் 14, 1896

வேலுார் மாவட்டம், ஆற்காட்டில்,அழகப்ப நாயக்கர் - ஜானகி அம்மாள்தம்பதியின் மகனாக, 1896ல், இதே நாளில் பிறந்தவர் மாணிக்கவேலு நாயக்கர்.

சென்னை சட்டக் கல்லுாரியில்படித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். ஏழைகளுக்கு இலவசமாக வாதாடினார். ஸ்வராஜ்யகட்சியில் சேர்ந்து, சென்னை மாகாண சட்டசபை உறுப்பினராக 1926 முதல் 1937 வரை தொடர்ந்தார்.பின், காமன்வீல் என்ற கட்சியை துவக்கி, 1952 சட்டசபை தேர்தலில் போட்டியிட்டார்.

அப்போதைய வட ஆற்காடு, செங்கல்பட்டு மாவட்டங்களில், வன்னியர் சமூகத்தினரிடையே செல்வாக்கு பெற்ற இவரது கட்சி, ஆறு இடங்களில்வெற்றி பெற்றது. அந்த தேர்தலில், எந்த கட்சிக்கும்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ராஜாஜி தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு ஆதரவளித்தார்.

ராஜாஜி, காமராஜர் அரசில் அமைச்சராக பதவி வகித்ததுடன், 1964ல் தமிழக சட்ட மேலவை தலைவராக பொறுப்பேற்ற இவர், தன் 99வது வயதில், 1996, ஜூலை 25ல் மறைந்தார்.

இவரது பிறந்த தினம் இன்று!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us