sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/இதே நாளில் அன்று/ இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று


PUBLISHED ON : நவ 28, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 28, 2024 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நவம்பர் 28, 1927


கோவையில், எச்.எம்.ஹண்டே - மகாலட்சுமி தம்பதிக்கு மகனாக, 1927ல் இதே நாளில் பிறந்தவர், எச்.வெங்கட்ரமண ஹண்டே எனும் எச்.வி.ஹண்டே. இவரது மூதாதையர்,கர்நாடக மாநிலம், மங்களூரைச் சேர்ந்தவர்கள்.

டாக்டரான இவரது தந்தை, இவரையும் டாக்டருக்கு படிக்க வைத்தார். 'வெள்ளையனே வெளியேறு' சுதந்திரப் போராட்டத்தில் கல்லுாரி மாணவராக பங்கேற்றார். சென்னை ஷெனாய் நகரில், மருத்துவமனை அமைத்து சேவை செய்தார்.

ராஜாஜி அழைத்ததால், சுதந்திரா கட்சியில் சேர்ந்து, 1967, 1971 சட்டசபை தேர்தல்களில், சென்னை, பூங்கா நகர் தொகுதி எம்.எல்.ஏ., ஆனார். 1973ல் எம்.ஜி.ஆர்., அழைத்ததால், அ.தி.மு.க.,வில் இணைந்தார். எம்.ஜி.ஆர்., அரசில்1980 மற்றும் 1984ம் ஆண்டுகளில் சுகாதாரத் துறை அமைச்சரானார்.

இவர், ராஜாஜியின் வரலாறு, அம்பேத்கர் சட்ட வரைவை உருவாக்கியது குறித்த நுால்களை எழுதியுள்ளார். கம்ப ராமாயணத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, கம்பனின் கவிச்சுவையை உலகம் அறிய தந்துள்ளார். தற்போது, பா.ஜ., ஆலோசனைக் குழுவில் உள்ளார்.

இவரது 98வது பிறந்த தினம் இன்று!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us