PUBLISHED ON : நவ 19, 2024 12:00 AM

நவம்பர் 19, 1975
மேற்கு வங்கத்தை சேர்ந்த, பிராமண குடும்பமான சுபீர் சென் -- சுப்ரா சென் தம்பதியின் மகளாக, தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதில், 1975ல் இதேநாளில் பிறந்தவர் சுஷ்மிதா சென்.
இவரது தந்தை விமானப்படையில்பணி செய்ததால், இவர், டில்லி விமானப்படை பள்ளி, செகந்திராபாத் துாய அன்னா உயர்நிலை பள்ளியில் படித்தார். கடந்த 1994ல், தன் 18வது வயதில், 'இந்திய அழகி, மிஸ் யுனிவர்ஸ்' பட்டங்களை வென்றார்; 1996ல், தஸ்தக் என்ற த்ரில்லர் திரைப்படத்தில் நடித்தார்.
பின்னர், 1997ல் தமிழில் வெளியான, ரட்சகன்படத்தில் நாகர்ஜுனாவின் ஜோடியாக நடித்தார். தொடர்ந்து, பல்வேறு ஹிந்தி படங்களில் நடித்த இவர், பிலிம்பேர் விருது, சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருது, பாலிவுட் திரைப்பட விருது உள்ளிட்டவற்றை பெற்றுள்ளார்; 'வெப் சீரிஸ்'களிலும் நடிக்கிறார். இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
தமிழ் ரசிகர்களுடைய, 'ஷக்கலக்க பேபி'யின் 49வது பிறந்த தினம் இன்று!

