PUBLISHED ON : அக் 24, 2024 12:00 AM

அக்டோபர் 24, 1914
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞராக இருந்த சுவாமிநாதன் - அம்மு தம்பதியின் மகளாக, 1914ல் இதே நாளில் பிறந்தவர் லட்சுமி.
இவர், சென்னை ராணிமேரி கல்லுாரியில் பட்டப் படிப்பையும், சென்னை மருத்துவக் கல்லுாரியில் டாக்டர் படிப்பையும் முடித்தார். காந்தியவாதியாகஇருந்த இவர், பி.ராமமூர்த்தியின் நட்பால் கம்யூ., ஆதரவாளராக மாறினார்.
கடந்த 1940ல் சிங்கப்பூர் சென்றவர், அங்குள்ளதோட்ட தொழிலாளர்களுக்கு மருத்துவம் செய்து, சிறந்த மருத்துவராக புகழ் பெற்றார். சிங்கப்பூரில்நடந்த பிரிட்டன் - ஜப்பான் போரில், காயமடைந்தோருக்கு மருத்துவம் பார்த்தார். நேதாஜியை சந்தித்து இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்தார். ஆசியாவின் முதல் பெண்கள் படையான ஜான்சிராணி படையை துவக்கினார்.
ஜப்பான் வான்படை குண்டுவீச்சில் காயமடைந்தார். சுதந்திரத்துக்கு பின், சகபோராளியான கலோனல் பிரேம்குமார் சேகலை மணந்தார். 2002ல் நடந்த ஜனாதிபதி தேர்தலில், அப்துல் கலாமுக்கு எதிராக, கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 'பத்ம விபூஷன்' விருது பெற்ற இவர், தன் 98வது வயதில், 2012, ஜூலை 23ல் மறைந்தார்.
ஆசியாவின் முதல் பெண் கேப்டன் பிறந்த தினம் இன்று!

