PUBLISHED ON : செப் 19, 2024 12:00 AM

செப்டம்பர் 19, 1965
இந்திய வம்சாவளி டாக்டர் தீபக் பாண்ட்யா - ஸ்லோவேனிய -அமெரிக்கரான, உர்சுலின் போனி தம்பதியின் மகளாக, அமெரிக்காவின்மாசசூசெட்சில், 1965ல், இதே நாளில் பிறந்தவர் சுனிதா வில்லியம்ஸ்.
இவர் மாசசூசெட்ஸ் கல்லுாரியில் இயற்பியல் அறிவியல், அமெரிக்க கடற்படை அகாடமியில் பயிற்சி முடித்தார். அமெரிக்க கடற்படையில் டைவிங் அதிகாரியாக சேர்ந்தார். பின், விமான ஏவியேட்டர் பயிற்சி பெற்றார்.
பல்வேறு கடல் பகுதிகளில் பணியாற்றிய பின், நேவல் பைலட், பாதுகாப்பு அதிகாரி, பயிற்றுனராக நியமிக்கப்பட்டார். போர்விமானங்களை ஓட்டும் பயிற்சி பெற்ற இவரை, 'நாசா' விண்வெளி வீராங்கனையாக தேர்வு செய்து, கடலுக்குள் ஒன்பது நாள் தங்கும்பயிற்சியை அளித்தது.
மாஸ்கோ ஆய்வு மையத்துக்காக, எக்ஸ்பெடிஷன்குழுவினருடன் விண்வெளிக்கு சென்றார். அங்கு, 322 நாட்கள் ஆய்வு செய்தார். 2024 ஜூன் 5ல், போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில்விண்வெளிக்கு சென்ற அவர், தற்போதும் அங்கு தான் உள்ளார். அங்கிருந்தபடியே, அமெரிக்க அதிபர் தேர்தலில் ஓட்டளிக்க உள்ள விண்வெளி மங்கையின், 59வது பிறந்த தினம் இன்று!

