sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இதே நாளில் அன்று

/

இதே நாளில் அன்று

/

இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று


PUBLISHED ON : செப் 13, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : செப் 13, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செப்டம்பர் 13, 2010

சென்னையில், ராகவன் - கனகவல்லிதம்பதியின் மகளாக, 1931, ஜனவரி10ல் பிறந்தவர் சூடாமணி. சிறு வயதில் பெரியம்மையால் பாதிக்கப்பட்டு, உடல் வளர்ச்சி குன்றினார்.இதனால், பள்ளி செல்லாமல், வீட்டிலேயே முடங்கினார். ஆனாலும்,தன்னார்வத்தால் வீட்டிலேயே தமிழ், ஆங்கிலம் கற்றார். தாயிடம், நீர் வண்ண ஓவியம் வரையக் கற்றார்.

இவரது சகோதர, சகோதரிகள் எழுத்தாளர்களாகவும், வாசகர்களாகவும் இருந்ததால், நிறைய வாசித்தார். பிரபல இதழ்களுக்கு கதைகளை எழுதி அனுப்பினார். இவர் எழுதிய, 'மனதுக்கு இனியவள்' என்ற புதினம், கலைமகள் வெள்ளி விழா விருது பெற்றது.

'இருவர் கண்டனர்' என்ற கதைக்கு, ஆனந்த விகடன் விருது கிடைத்தது. 'இரவுச்சுடர்' என்ற கதை, ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.பெண்களின் வாழ்வியல் பிரச்னைகள், தீர்வுகளை தன் கதைகளில் எழுதினார்.

'பபாசி' வழங்கிய ஒரு லட்சம் ரூபாய் பரிசை, பலதொண்டு நிறுவனங்களுக்கு தந்த இவர், 2010ல் தன், 79வது வயதில் இதே நாளில் மறைந்தார்.

திருமணம் செய்து கொள்ளாத இவர், தன் பல கோடி ரூபாய் சொத்துக்களை மருத்துவமனைக்கும், மாணவர் இல்லத்துக்கும் எழுதி வைத்தார்.

தயாள எழுத்தாளர் ஆர்.சூடாமணி மறைந்த தினம் இன்று!






      Dinamalar
      Follow us