sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/இதே நாளில் அன்று/ இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று


PUBLISHED ON : ஏப் 14, 2026 03:22 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 14, 2026 03:22 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஏப்ரல் 14, 1913

தேனி மாவட்டம், லட்சுமிபுரத்தில் ஒரு விவசாய குடும்பத்தில், 1913ல் இதே நாளில்

பிறந்தவர், என்.ஆர்.தியாகராஜன். பள்ளியில் ஏழாம் வகுப்பு வரை படித்த இவர், காந்தியின் சுதந்திர போராட்டத்தால் ஈர்க்கப்பட்டு, அதில் பங்கேற்றார். பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டதற்காக, 1930 முதல் 1946 வரை, நான்கு முறை கைது செய்யப்பட்டு, ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார்.

சுதந்திரத்திற்கு பின், 1957ல் நடந்த சட்டசபை தேர்தலில், தேனி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1968ல், சட்ட மேலவை உறுப்பினராக தேர்வானார்.

அப்போது, தமிழகத்தில் நடந்த காங்., அரசின் முதல்வர் காமராஜரின் நண்பரான இவர், அவரது உதவியுடன் கொடைக்கானலை சுற்றுலா

தலமாக்கினார்; தேனியில் அரசு பொது மருத்துவமனை, மதுரை மாவட்டத்தில் நுாற்றுக்கணக்கான பள்ளிகளை திறந்தார்.

பல கூட்டுறவு சங்கங்களை உருவாக்கி,

விவசாயிகளுக்கு கடன்கள் வழங்கியவர், தன் 56வது வயதில், 1969, ஏப்ரல் 27ல் மறைந்தார். தேனி அரசு மருத்துவமனை, தேனியில் ஒரு சாலை, தேனி கோபாலபுரம் அரசு துவக்கப் பள்ளி

ஆகியவற்றுக்கு, இவரது பெயர் சூட்டி, கவுரவிக்கப்பட்டுள்ளது.

இவரது பிறந்த தினம் இன்று!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us