தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/இது உங்கள் இடம்: அக். 30

இது உங்கள் இடம்: அக். 30

இது உங்கள் இடம்: அக். 30


PUBLISHED ON : அக் 30, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 30, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கள்ள ஓட்டிற்கு அடிபோடும், ‘இண்டி’ கூட்டணி!



கி.சந்தானகிருஷ்ணன், சென்னையில் இருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: வாக் காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து போராட்டம் நடத்தி வரும், காங்கிரஸ் தலைமையிலான, ‘இண்டி’ கூட்டணியினர், ‘மீண்டும் ஓட்டு சீட்டு முறை நடைமுறைக்கு வர வேண்டும்’ என்று கூப்பாடு போடு கின்றனர்.

சுதந்திரத்திற்கு பின், முதன் முதலாக, 1952 ல் பொதுத் தேர்தல் நடந்த போது, எனக்கு, 10 வயது!

அப்போது, விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துாரில் வாழ்ந்து வந்தோம்.

பார்லிமென்ட் மற்றும் சட்டசபை தேர்தல் இரண்டும் ஒரே நேரத்தில் நடந்தது. காங்கிரஸ் கட்சி சார்பில், பார்லிமென்ட் தேர்தலில் காமராஜரும், சட்டசபை தேர்தலில் முன்னாள் சென்னை மாகாண முதல்வர் குமாரசாமி ராஜாவும் போட்டியிட்டனர்.

சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட குமாரசாமி ராஜா, வில் – அம்பு சின்னத்தில் போட்டியிட்டார்.

அப்போதெல்லாம், கட்சி சின்னம் ஒட்டப்பட்ட பெட்டிகள் தான், ஓட்டுச் சாவடியில் வைக்கப்பட்டிருக்கும். நமக்கு பிடித்த சின்னம் இருக்கும் பெட்டிக்குள் ஓட்டுச் சீட்டை போட வேண்டும்.

அக்காலத்திலேயே, வில் – அம்பு கட்சிக்காரர்கள், திருப்பதி பெருமாள் படத்தின் மீது சத்தியம் செய்யக் கூறி, ஓட்டு போட, 5 ரூபாயும், ஓட்டை பெட்டியில் போடாமல் கொண்டு வந்து பூத் ஏஜென்டிடம் கொடுத்தால், 10 ரூபாயும் தந்ததாக கூறுவர்.

அப்படியும், குமாரசாமி ராஜா அந்த தேர்தலில் தோற்றுப் போனார்; காமராஜர் வெற்றி பெற்றார்.

இப்படி ஓட்டு திருட்டு நடைபெற்றதால் தான், 1957ல் சின்னத்துடன் கூடிய ஓட்டு சீட்டு அறிமுகம் செய்யப்பட்டது. மறைவான இடத்தில் ஓட்டு சீட்டு மீது முத்திரை குத்தி, அதிகாரிகள் முன் பொதுவான பெட்டியில் இடவேண்டும்; வெளியில் எடுத்து வர முடியாது.

இதில், எதிராளிக்கு அதிகம் ஓட்டு விழுவதாக தெரிந்தால், ஓட்டு எண்ணுபவர் வாயிலாக, பிறர் அறியாவண்ணம் பெட்டியில், ‘இங்க்’ ஊற்றி, அந்த ஓட்டுகளை செல்லாத ஓட்டுகளாக மாற்றியும், குறைவான ஓட்டு வித்தியாசத்தில் போட்டி நிலவும் போது, வெற்றியை பறித்த வரலாறும் உண்டு.

மேலும், ரவுடிகள் வாயிலாக ஓட்டு சாவடியை கைப்பற்றி, கள்ள ஓட்டுகள் போடுவது, ஓட்டுப் பெட்டியை துாக்கிக் கொண்டு ஓடுவது போன்ற அத்தனை அத்துமீறல்களும் நடந்தன.

இவற்றை எல்லாம் தடுக்க, 1982ல் கேரளா தேர்தலில் மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது. பின், படிப் படியாக நாடு முழுதும் அமல்படுத்தப்பட்டது.

தேர்தல் கமிஷன் சவால் விட்டும், இதுவரை அதில் முறைகேடு செய்ய முடியும் என்பதை, எதிர்க்கட்சிகளால் நிரூபிக்க முடியவில்லை.

ஆனாலும், சும்மா இருந்தால், ஆட்சி அதிகாரத்தில் அமர முடியாது அல்லவா?

அதனால், வாக்காளர் பட்டியலில், ஒரே எண் கொண்ட வீட்டில், 500க்கும் மேற்பட்ட போலி வாக்காளர்களை சேர்த்து, எல்லாத் தொகுதிகளிலும் தங்களுக்கு சாதகமாக ஓட்டுகளை பெற்று வந்தன, சில அரசியல் கட்சிகள்.

இவற்றை தடுக்கத்தான், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை கையில் எடுத்தது தேர்தல் கமிஷன்.

இறந்த, இடம் பெயர்ந்த, ஒரே நபரின் ஒன்றுக்கு மேற்பட்ட ஓட்டுகள் மற்றும் இந்திய குடிமக்கள் அல்லாதவர்கள் பெயர்களை நீக்கிவிட்டது.

விளைவு... ஆட்சி மாற்றம் நிகழாது என்று இறுமாந்திருந்த கட்சிகள் தோல்வியடைந்து, தமிழகம், மே.வங்கம், கேரளா போன்ற மாநிலங்களில் புதிய கட்சிகள் ஆட்சிக்கு வந்துவிட்டன.

அதனால் ஏற்பட்ட பயமே, தேர்தல் கமிஷனுக்கு எதிராகவும், ஓட்டு சீட்டு முறைக்கு ஆதரவளித்தும், ‘இண்டி’ கூட்டணியினர் போடும் கோஷம்!

கருவாட்டை ருசி கண்ட பூனைகள் அதைத் தேடி ஓடுவது போல், கள்ள ஓட்டுகளால் வெற்றி பெற்ற கட்சிகள், அதற்கு ஆதரவளிப்பதில் வியப்பில்லையே!

lll

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us