தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/இது உங்கள் இடம்: அக். 29

இது உங்கள் இடம்: அக். 29

இது உங்கள் இடம்: அக். 29

2


PUBLISHED ON : அக் 29, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 29, 2026 12:00 AM

2


2
Follow on Google
அ நிறம் | அளவு

எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டி வரும்!



சே.கணேஷ், பெரியகுளம், தேனி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: தேர்தலின் போது, அரசியல் கட்சிகள் இலவசத் திட்டங்கள், பெண்களுக்கான உதவித்தொகை, விவசாயி களுக்கான சலுகைகள் எனப் பல வாக்குறுதிகளை அளிக்கின்றன. அதேநேரம், தேர்தல் முடிந்து ஆட் சியில் அமர்ந்தபின், அவற்றில் எத்தனை நிறைவேற்றப்பட்டன, எத்தனை கைவிடப்பட்டன என்பதை, மக்களால் அறிந்துகொள்ள முடிவதில்லை.

இதனாலேயே, தேர்தல் வாக்குறுதிகள் அரசியல் விவாதமாக மாறிவிடுகின்றன.

ஒரு கட்சி, மக்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை, ‘நலத்திட்டங்கள்’ என்கிறது; மற்றொரு கட்சியோ, அதை, ‘நிதிச் சுமை’ என்று விமர்சிக்கிறது.

அனைவரும் ஒரே மாதிரியான பொருளாதார சூழலில் இல்லாததால், இலவச திட்டங்களை தவறானவை என்றும் கூற மு டியாது. ஏனெனில் அவை, பல குடும்பங்களின் வாழ்க்கைக்கு ஆதரவாக இருக்கின்றன.

அதேநேரம், கடன் வாங்கி இலவச திட்டங்களை தொடர்வது, எதிர்காலத் தலைமுறைகளின் வளர்ச்சி திட்டங்களை பாதிக்கும்!

எனவே, நலத்திட்டங்களுக்கும், கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, உள்கட்டமைப்பு போன்ற நீண்டகால முதலீடுகளுக்கும் இடையே சமநிலை வேண்டும்.

வெற்றி பெற்று ஆட்சியில் அமரும் ஒவ்வொரு கட்சியும், தாங்கள் நிறைவேற்றிய தேர்தல் வாக்குறுதிகள் குறித்தும், அதனால் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் பற்றியும் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

எதிர்க்கட்சிகளும் ஆளுங்கட்சியின் ஒவ்வொரு திட்டத்தையும் குறை கூறுவதற்குப் பதில், நடைமுறைப்படுத்தக்கூடிய மாற்றுத் திட்டங்களை முன்வைக்கலாம்.

மக்களும் உடனடியாகக் கிடைக்கும் நன்மைகளை மட்டும் பார்த்து ஓட்டுப் போடாமல், கடந்த காலச் செயல்பாடுகள், வேலைவாய்ப்பு, கல்வித் தரம், ஊழல் தடுப்பு, நிர்வாகத் திறன் போன்ற அம்சங்களை யும் மதிப்பிட்டே தேர்தலில் ஓட்டளிக்க வேண்டும்.

தேர்தலில் அரசியல் கட்சிகள் அளிக்கும் வாக்குறுதிகள் ஓட்டுகளை பெற உதவலாம்; ஆனால், அவற்றைச் செயல்படுத்தும் போது தான், மக்களின் நம்பிக்கையை அக்கட்சியால் பெற முடியும்.

இதை ஆண்ட கட்சிகளும், ஆளுங்கட்சியும் மனதில் கொண்டால், தேர்தலின் போது மக்களின் எதிர்ப்பை எதிர்கொள்ளும் நிலை ஏற்படாது!



பத்திரிகைகள் மீது பழனிசாமி பாயலாமா?



வி.மோகன், நெல்லிக்குப்பம், கடலுார் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: ‘தினமலர்’ நாளிதழ் மற்றும் சேலத்திலிருந்து வெளியாகும், ‘காலைக்கதிர்’ நாளிதழ்கள் எனக்கு எதிராகவே செய்திகள் வெளியிடுகின்றன. பழனிசாமியும், அ.தி.மு.க.,வும் இல்லையென்றால், பத்திரிகை, ஊடகங்கள் ஓடாது’ என, பொருமியுள்ளார், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி.

பழனிசாமி எப்படி தமிழக முதல்வரானார் என்பது நாடறிந்த ரகசியம். ஆனாலும், தன்னை ஜெயலலிதாவுக்கு நிகராக எண்ணிக் கொண்டு, ‘பழனிசாமி தான் அ.தி.மு.க.,’ என்று அகங்காரத்துடன் நடந்து கொண்டார்.

அதுமட்டுமா... எதிர்க்கட்சியான, தி.மு.க.,விற்கு எதிராக சாட்டையை சுழற்றுவதற்கு பதில், தன் கட்சியினர் மீதே சுழற்றத் துவங்கினார்.

விளைவு... சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. தோல்விக்கு பின்பும் பாடம் படிக்காமல், பதவி ஆசையில், தி.மு.க.,வுடனே கூட்டணி வைக்க துணிந்து, ‘இன்னும் கெடுவேன்; இதற்கு மேலும் கெடுவேன்; என்னைக் கேட்க யாருமில்லை’ என்பது போல் நடந்து, அ.தி.மு.க., கூடாரம் காலியாக காரணமாக இருந்து விட்டு, தவறை சுட்டிக் காட்டும் பத்திரிகை கள் மீது பழனிசாமி பாயலாமா?



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us