தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/இது உங்கள் இடம்: நவ. 10

இது உங்கள் இடம்: நவ. 10

இது உங்கள் இடம்: நவ. 10

1


PUBLISHED ON : நவ 10, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 10, 2026 12:00 AM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இவர்களுக்கு



ஓட்டு போட்டால்



தமிழகம் திவாலாகும்!



அ.சேகர், கடலுாரில் இருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: கடந்த 1995ல் சசிகலாவின் அக்கா மகன் சுதாகரனை, வளர்ப்பு மகனாக அறிவித்ததுடன், அவரது திருமணத்தை மிக ஆடம்பரமாக நடத்தினார், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா.

அந்த திருமணத்திற்காக சென்னையில், 75 ஏக்கரில் பந்தல் அமைத்து, ஏகப்பட்ட பதார்த்தங்களுடன் லட்சக்கணக்கானோருக்கு விருந்து வழங்கப்பட்டது. அதுவே, அடுத்து வந்த, தி.மு.க., ஆட்சியில், அவர் மீது சொத்து குவிப்பு வழக்கு தொடுக்க காரணமாயிற்று!

அந்த திருமணத்திற்காக, 6 கோடியே, 49 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டது என்று, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கூறினர். வருமான வரித்துறையினரோ, 10 கோடி ரூபாய் என்றனர். உண்மையில், 100 கோடி ரூபாய்க்கும் மேல் செலவு செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

கடந்த 1996 தேர்தலில், அ.தி.மு.க., தோற்கவும், ஜெயலலிதா மற்றும் சசிகலா தண்டிக்கப்படவும், இந்த திருமணமும் ஒரு காரணம்.

தற்போது, ஜெயலலிதா நடத்தி வைத்த திருமணத்தையே பின்னுக்குத் தள்ளி விட்டது, தி.மு.க., முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் பேத்தி செந்தாமரையின் திருமணம்.

இத்திருமண செலவு, 500-, 600 கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. திருமண பத்திரிகை ஒன்றின் விலையே, 25 ஆயிரம் ரூபாய் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!

மணமகளுக்கு, 100 கோடி ரூபாய் மதிப்பில் நகைகள், 12.25 கோடி ரூபாய் மதிப்பில் சொகுசு கார் என்று கோடி கோடியாக பணம் செலவு செய்யப்பட்டுள்ளது.

திராவிட மாடல் ஆட்சியில் எந்தளவு ஊழல் செய்து மக்களின் பணத்தை கொள்ளையடித்து வைத்திருந்தால், இப்படியொரு ஆடம்பர திருமணத்தை நடத்தி இருக்க முடியும், பாருங்கள்!

இதேபோன்று தான், கடந்த தி.மு.க., ஆட்சியில் பத்திர பதிவு துறை அமைச்சர் மூர்த்தியின் மகன் திருமணம், வெகு ஆடம்பரமாக நடந்தது. 30 ஏக்கர் பரப்பளவில் கோட்டை போன்ற பிரமாண்ட ‘செட்’ அமைக்கப்பட்டு, ஒரு அரச குடும்பத்தின் திருமணம் போல் நடந்தது. இத்திருமணத்திற்கு, 100 முதல், 300 கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.

ஆனால், இதற்கெல்லாம் இவர்களிடம் முறையான பதில்கள் இருப்பதில்லை. பெயருக்கு ஊழல் வழக்குகள் தொடுக்கப்படுகின்றன. ஆனால், அது நமத்துப் போன பட்டாசாக செயல் இழந்து விடுகின்றனவே தவிர, ஊழல்வாதிகள் தண்டிக்கப்படுவதில்லை.

அதனாலேயே, நாய்க்கு எலும்பு துண்டை வீசுவது போல், சில இலவச திட்டங்களை வீசி, ஆட்சிக்கு வந்து, மக்களின் வரிப்பணத்தை சுரண்டி கொழுக்கின்றனர்.

இனியும் இவர்களுக்கு ஓட்டு போட்டால், தமிழகம் திவாலாகி விடும் என்பது மட்டும் சர்வ நிச்சயம்!

lll

ஈ.வெ.ரா., பெயர் வைத்தது அபத்தம்!



ஆர்.மகேசன், அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, ‘இ –மெயில்’ கடிதம்: ஒரு நாட்டின் வளர்ச்சியை மதிப்பீடு செய்யும் முக்கிய அளவுகோலாக இருப்பது கல்வி. கற்றலை மேம்படுத்தி, அறிவாற்றலையும், மனித நேயத்தையும் வளர்ப்பதற்கு உறுதுணையாக இருக்கும் புனிதமான இடம் நுாலகம்.

ஊழல் செய்வதில் காற்றையும், மண்ணையும் கூட விட்டுவைக்காத திராவிட மாடல் ஆட்சியாளர்கள், நுாலகத்திலும் தங்கள் கைவரிசையைக் காட்டியிருக்கின்றனர்.

நுாலகவியலை பிரபலப்படுத்தி அந்த துறைக்கென ஒரு அங்கீகாரம் கிடைக்கச் செய்தவர், இந்திய நுாலகவியலின் தந்தை எனப் போற்றப்படும் தமிழகத்தைச் சேர்ந்த எஸ்.ஆர்.அரங்கநாதன். அவரது பிறந்த தினமான ஆகஸ்ட்- 9, தேசிய நுாலக தினமாக அறிவிக்கப்பட்டது.

அதேபோல, புத்தகம் வாசிக்கும் கலாசாரத்தை பிரபலப்படுத்திய கேரளாவைச் சேர்ந்த, பி.என்.பணிக்கரின் பிறந்த தினமான ஜூன்- 19, தேசிய வாசிப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் ஒருவரது பெயரை நுாலகத்திற்கு வைத்திருக்கலாம்.

‘தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்’ என்று பாடிய பாரதியார்; ‘எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு’ என்று பாடிய பாரதிதாசன்; இவர்களில் ஒருவர் பெயரையாவது வைத்திருக்கலாம்.

ஆனால், திராவிட மாடலுக்குத் தெரிந்ததெல்லாம், ஈ.வெ.ரா., அண்ணாதுரை, கருணாநிதி ஆகிய மூன்று பெயர்கள் தான்.

கருணாநிதி மட்டும் பிறக்காமல் போயிருந்தால் தமிழ்மொழி என்றோ அழிந்துபோயிருக்கும் என்ற பிம்பத்தை கட்டமைத்து, இரண்டு தலைமுறை தமிழர்களை மூடர்களாக்கி விட்டது, திராவிட மாடல்.

ஒரு அறிவுசார் மையத்தில் தவறான நுால்களை வைத்ததுடன், தமிழ்மொழியையும், தமிழ் இலக்கியங்களையும் இழிவுபடுத்திப் பேசிய ஈ.வெ.ராமசாமி யின் பெயரை அதற்கு சூட்டியிருப்பது ஒரு அபத்தமான செயல். lll

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us