sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

தினம் தினம்

/

இது உங்கள் இடம்

/

தமிழர்களின் வாழ்வியல் முறை அறிவீரா?

/

தமிழர்களின் வாழ்வியல் முறை அறிவீரா?

தமிழர்களின் வாழ்வியல் முறை அறிவீரா?

தமிழர்களின் வாழ்வியல் முறை அறிவீரா?

8

PUBLISHED ON : ஜன 25, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : ஜன 25, 2025 12:00 AM

8

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கே.சுப்பிரமணி, நெல்லையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மாட்டுப் பொங்கலையொட்டி, சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள கோசாலையில் நடைபெற்ற கோ பூஜையில் பங்கேற்ற சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி, மாட்டு கோமியம் குறித்து பேசும்போது, 'ஒரு சன்னியாசி, காய்ச்சல் வந்து அவதிப்பட்ட போது, 'பசுவின் கோமியத்தை குடித்தால், காய்ச்சல் சரியாகும்' என்றார் ஒருவர். அவ்வாறு செய்த சன்னியாசிக்கு, 15 நிமிடத்தில் காய்ச்சல் சரியாகி விட்டது' என்று, தான் அறிந்த நிகழ்வை கூறியுள்ளார்.

இதை சர்ச்சையாக்கி மகிழ்கின்றனர், தமிழகத்து பகுத்தறிவு பகலவர்கள்!

அமைச்சர் பொன்முடியோ, 'ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி, கவர்னர் போல மாறிவிட்டார். அந்த அடிப்படையில் தான் இக்கருத்தை தெரிவித்துள்ளார். இது ஈ.வெ.ரா., அண்ணாதுரை, கருணாநிதி வழியில் நடக்கும் ஆட்சி; தமிழக மக்கள் அறிவியல் ரீதியாக சிந்திக்கக் கூடியவர்கள்; காமகோடி வேண்டுமானால் மாட்டு மூத்திரத்தை குடிக்கட்டும்' என்று கேலி செய்துள்ளார்.

பொன்முடி இன்று மன்னர் பரம்பரை போல் ஆடம்பர வசதியுடன் இருக்கலாம்; மூன்று தலைமுறைக்கு முன், அவரது எள்ளுப்பாட்டியும், கொள்ளுப் பாட்டியும் கூட, மாட்டுச்சாணத்தை கரைத்து வாசல் தெளித்து, மாட்டுச்சாணத்தால் வீட்டை மேடு பள்ளம் இல்லாமல் மெழுகி, அதில் பாய் போட்டு படுத்தவர்கள் தான் என்பதை மறந்து விட வேண்டாம்!

இன்றும் வீட்டு விசேஷ தினங்களில், கிரகபிரவேசத்தில், பண்டிகை நாட்களில் மாட்டுக் கோமியத்தை வீடு முழுதும் தெளிப்பது, தமிழர்களின் வழிபாட்டு கலாசாரம் என்பதை, பொன்முடி அறியவில்லையா?

தமிழர்கள் மாட்டுச்சாணத்தை, கோமியத்தை கிருமி நாசினியாக கருதினர்; வீடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நோய் தொற்று ஏற்படாமல் இருக்க, சாணத்தை கரைத்து தெளித்தனர்; வீட்டிற்குள் விஷப் பூச்சிகள், கிருமிகள் தங்காமல் இருக்க கோமியத்தை தெளித்தனர்.

தமிழர்களை காட்டுமிராண்டி என்று சொன்னவரை தலைவராக ஏற்றுக் கொண்ட பொன்முடியால், கோமியத்தை ஏற்க முடியாமல் போகலாம்; ஆனால், இதுதான் தமிழர்கள் சுகாதாரம் பேணும் வாழ்வியல் முறை!

ஐ.ஐ.டி., இயக்குனர் தான் கற்று அறிந்ததை சொல்கிறார்; அதை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும் என்று என்ன கட்டாயம்?



      Dinamalar
      Follow us