/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
சமூக பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள்!
/
சமூக பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள்!
PUBLISHED ON : ஜூலை 30, 2025 12:00 AM

கோ. பாண்டியன், செங்கல்பட்டில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த சில மாதங்களுக்கு முன், சைவ - வைணவ சமய புனித சின்னங்கள் கு றித்து ஆபாசமாக பேசியிருந்தார், முன்னாள் தி.மு.க., அமைச்சர் பொன்முடி. பல்வேறு தரப்பினரும் இதற்கு கண்டனம் தெரிவித்த நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இவ்வழக்கை விசாரித்து வந்த, சென்னை, வேப்பேரி சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர், 'மதம் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பொன்முடி பேசவில்லை. 50 ஆண்டுகளுக்கு முன் நடந்த பட்டிமன்றத்தில் விவாதம் செய்யப்பட்ட ஒரு கருத்தையே மீண்டும் நினைவுபடுத்தி பேசியுள்ளார்.
'பொன்முடியின் பேச்சை முழுமையாக கேட்காமல், சமூக வலைதளங்களில் வெட்டி, ஒட்டி பரப்பப்பட்ட பேச்சை மட்டும் பார்த்துவிட்டு ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் மனம் புண்படுவதாக புகாரில் குறிப்பிட்டு உள்ளது.
'எனவே, பொன்முடி மீது குற்ற நடவடிக்கை எடுக்க, தகுந்த முகாந்திரம் ஏதும் இல்லை' என்று புகார் மனு மீதான விசாரணையை முடித்து வைத்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
கடந்த 1942ல் வெளிவந்த, நந்தனார் என்ற திரைப் படத்தில், பண்ணையாளான நந்தனார், சிதம்பரம் சென்று நடராஜரை தரிசனம் செய்ய வேண்டும் என்று பண்ணை முதலாளியான வேதியரிடம் அனுமதி கேட்பார்.
அதற்கு பட்டியலினத்தில் குறிப்பிட்ட ஒரு ஜாதியின் பெயரை சொல்லி, 'உனக்கெல்லாம் சிதம்பர தரிசனமா?' என்று கேட்பார், வேதியர்.
திரைப்படத் தணிக்கையும், பட்டியல் இனத்திற்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டமும் அமலில் இல்லாத காலத்தில் எடுக்கப்பட்ட திரைப்படம் இது!
ஆனால், வன்கொடுமை தடுப்புச் சட்டம் அமலில் உள்ள இக்காலத்தில், அதுபோன்று ஒருவர் பேசினால், 80 ஆண்டு களுக்கு முன் நந்தனார் திரைப்ப டத்தில் பேசிய வசனத்தை நினைவுபடுத்தி பேசி விட்டார் என்று காவல் துறை வழக்கு பதியாமல் விட்டு விடுமா?
ஆளுங்கட்சியை சேர்ந்தவர் என்பதால், பொன்முடி மீது குற்ற நடவடிக்கை எடுக்க முகாந்திரம் ஏதும் இல்லை என்று கூறும் காவல் துறை, மாற்றுக் கட்சியை சேர்ந்தவர் கூறியிருந்தால், கைது செய்து சிறையில் அடைக்காமல் விட்டிருக்குமா?
காவல் துறை அதிகாரிகள் கொஞ்சமாவது சமூக பொறுப்புடன் செயல்பட வேண்டு ம்!
போராட்டத்திலும் போலியா? கே.எஸ்.தியாகராஜ்பாண்டி யன், காரைக்குடியில்
இருந்து எழுதுகிறார்: மத்திய அரசை கண்டித்து, தமிழகத்தில் தொழிற்சங்கங்கள்
சமீபத்தில் போராட்டம் நடத்தின. இப்போராட்டத்தில் தமிழக அரசு போக்குவரத்து
ஊழியர்களும், அங்கன்வாடி பணியாளர் களும் பங்கேற்றனர்.
மத்திய அரசுக்கும், போக்குவரத்து கழகத்திற்கும் என்ன சம்பந்தம்?
அங்கன்வாடி பணியாளர்களுக்கு சம்பளம் தருவது மத்திய அரசா, மாநில அரசா?
இவர்கள் ஏன் மத்திய அரசை எதிர்க்க வேண்டும்? மத்திய அரசு ஊழியர் களுக்கு
ஏதா வது குறை இருந்தால், அவர்கள் மத்திய அரசை எதிர்த்து போராடுவதில் தவறு
இல்லை. ஆனால், சம்பந்தம் இல்லாமல் ஏன் மாநில அரசு ஊழியர்கள், மத்திய அரசை
கண்டித்து போராட வேண்டும்?
அ.தி.மு.க., ஆட்சி செய்தால் மாநில அரசை கண்டித்து போராட்டம்... தி.மு.க., ஆட்சி செய்தால் மத்திய அரசை எதிர்த்து போராட்டமா?
இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்... தொழிற்சங்கங்கள் எந்த அளவு திராவிட மாடல் அரசின் கைப்பாவைகளாக இருக்கின்றன என்பதை!
கடந்த 2021ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் போக்குவரத்து ஊழியர்களுக்கு
கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றை கூட தமிழக அரசு நிறைவேற்றவில்லை.
அதை எதிர்த்து போராட இச்சங்கங்களுக்கு துணிவு இல்லை. ஆனால், தங்களுக்கு சம்பந்தம் இல்லாத மத்திய அரசை எதிர்த்து போராடுகின்றனர்.
இவர்கள் என்ன செய்தாலும் நம்புவதற்கு, மக்களை முட்டாள்கள் என்று நினைத்து விட்டனர் போலும்!
இவர் களா காங்கிரஸ் கட்சியினர்? எஸ்.கீதாஞ்சலி , சென் னை யில் இருந்து
அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: காமராஜர் காலத்து காங்கிரசாருக்கும்,
இன்றைய காங்கிரசாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. காரணம், அன் றைய
காங்கிரஸ் கட்சி, குடும்பத்தை மறந்து, நாட்டை குறித்து மட்டுமே சிந்தித்த
தன்னலமற்ற தியாகிகள் நிறைந்த ஓர் இயக்கம்.
இன்றைய காங்கிரசாரோ,
பதவிக்காக எந்த நிலைக்கும் இறங்க துணிபவர்கள். இவர்கள் எப்படி காமராஜர்
குறித்து தி.மு.க., - எம்.பி., சிவாவின் பேச்சுக்கு எதிர்வினை ஆற்றுவர்?
காமராஜர் குறித்து ஏதாவது சொல்லப்போக , தங்களுக்கு கிடைக்கும், 10 - 15
சீட்டுகளும் தி.மு.க.,விடமிருந்து கிடைக்காமல் போய் விட்டால் என்ன செய்வது
என்பது தான் இவர்களது ஒரே கவலை.
அதனால் தான், தமிழக காங்.,
தலைவர் செல்வப் பெருந்தகை, 'காமராஜர் விஷயம் முடிந்து போன ஒன்று; இதை
பெரிதாக்கி, எங்கள் கூட்டணியை கலைக்கப் பார்க்கின்றனர் எதிர்க்கட்சியினர்.
இதற்கெல்லாம் நாங்கள் பலியாக மாட்டோம்...' என்று கூறியுள்ளார்.
இதேபோன்று தான், 'காமராஜர் ஆட்சி அமைப்போம்' என்று மானமுள்ள காங்கிரஸ்காரர்
ஒருவர் சொல்லப் போக, பதற்ற மான செல்வப்பெருந்தகை, 'இப்போது நடக்கும்
ஸ்டாலின் ஆட்சியே காமராஜர் ஆட்சி தான்' என்று முடித்து வைத்தார்.
காமராஜர் போன்ற தியாகிகள் இவர்களது தலைவர்கள் இல்லை; நிலக்கரி, போபர்ஸ்
பீரங்கி, காமன் வெல்த், ரபேல் ஊழல்களுக்கு சொந்தக் காரர்களான ராஜிவ்,
சோனியா, ராகுல், பிரியங்கா மட்டுமே இவர்க ளது தலைவர்கள்.
எனவே,
பணத்துக்கும், பதவிக்கும் அடித்துக் கொள்ளும் சோனியா விசுவாசிகளான தமிழக
காங்கிரசாரிடமிருந்து நாட்டுப் பற்றையோ, காமராஜர் குறித்த எம்.பி.,
சிவாவின் பேச்சுக்கு எதிர்வினையை எதிர்பார்ப்பதோ அர்த்தமற்றது!
நேர்மைக்கு வந்த சோதனை! குரு பங்கஜி, சென்னை யில் இருந்து அனுப்பிய, 'இ -
மெயில்' கடிதம்: சட்ட விரோத மது பாட்டில் கடத்தல் மற்றும் மது விற்பனையை
தடுக் கும் பணியில் முனைப்பு காட்டியவர், மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு
அமலாக்க பிரிவு காவல் துறை அதிகாரி, சுந் தரேசன்.
இது தொடர்பாக, 1,200 வழக்குகள் போடப்பட்டு, 700க்கும் மேற்பட்ட குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்.
இது, காவல் துறையில் உள்ள அதிகார கருப்பு ஆடுகளின் கண்களை உறுத்தவே,
அவரது அரசு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டதுடன் தற்போது, பணியிடை நீக்கமும்
செய்யப்பட்டுள்ளார்.
'நேர்மையாளர்களுக்கு வாழ்நாள் முழுதும்
போராட்டம்' என்பது போல், திராவிட மாடல் ஆட்சியில், அதிகாரிகள் நேர்மையாக
வாழ்வதே, பெரும் போராட்டமாக உள்ளது!