sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

இதப்படிங்க முதல்ல

/

 திருவெண்காடு கோவிலில் துர்கா பால்குடம் எடுத்து வழிபாடு

/

 திருவெண்காடு கோவிலில் துர்கா பால்குடம் எடுத்து வழிபாடு

 திருவெண்காடு கோவிலில் துர்கா பால்குடம் எடுத்து வழிபாடு

 திருவெண்காடு கோவிலில் துர்கா பால்குடம் எடுத்து வழிபாடு

7


UPDATED : டிச 08, 2025 07:54 AM

ADDED : டிச 08, 2025 05:21 AM

Google News

UPDATED : டிச 08, 2025 07:54 AM ADDED : டிச 08, 2025 05:21 AM

7


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலாடுதுறை: சீர்காழி அருகே புதன் ஸ்தலமான திருவெண்காடு கோவிலில், பால்குடம் எடுத்து, முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா வழி பாடு நடத்தினார்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே திருவெண்காடு கிராமத்தில், தேவார பாடல் பெற்ற பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. நவகிரஹங்களில் இது புதன் ஸ்தலமாகும். இங்கு சிவபெருமானின் அம்சமான அகோரமூர்த்தி, தனி சன்னிதியில் அருள்பாலித்து வருகிறார்.

அகோர மூர்த்தியை வழிபட்டால் சத்ரு உபாதைகள் நீங்கும் என்பது ஐதீகம். அகோர மூர்த்திக்கு ஞாயிறுதோறும் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இதில், கார்த்திகை மூன்றாவது ஞாயிறு அன்று நடைபெறும் அபிஷேகம் சிறப்பானதாக கூறப்படுகிறது.

அந்த வகையில், ஞாயிற்றுக்கிழமையான நேற்று நடந்த அகோரமூர்த்தி திருநாளில், தமிழக முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா பால்குடம் எடுத்து வழிபட்டார். பக்தர்களுடன் கோவில் சந்திர தீர்த்தத்தில் இருந்து பால்குடம் எடுத்து, கோவிலை வலம் வந்து அகோர மூர்த்திக்கு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினார்.

தொடர்ந்து, சுவாமி, அம்பாள், நடராஜர், புதன் பகவான் சன்னிதிகளுக்கு சென்று வழிபாடு நடத்தினார்.






      Dinamalar
      Follow us