/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
டிபாசிட்டுக்கு ரூ.10 நாணயம் காந்தியவாதி மனு தாக்கல்
/
டிபாசிட்டுக்கு ரூ.10 நாணயம் காந்தியவாதி மனு தாக்கல்
டிபாசிட்டுக்கு ரூ.10 நாணயம் காந்தியவாதி மனு தாக்கல்
டிபாசிட்டுக்கு ரூ.10 நாணயம் காந்தியவாதி மனு தாக்கல்
ADDED : மார் 21, 2024 12:06 AM

நாமக்கல் :நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம், கிழக்கு பாலப்பட்டியைச் சேர்ந்தவர் காந்தியவாதி ரமேஷ், 43. அடிக்கடி தேர்தல்களில் போட்டியிடும் இவர், தமிழ் வழியில் அரசியல் அறிவியல் பட்டம் படித்துள்ளார்.
அஹிம்சா சோஷியலிஸ்ட் கட்சியின் நிறுவன தலைவராக உள்ளார். நேற்று தன் ஆதரவாளர்களுடன், நாமக்கல் கலெக்டர் அலுவலகம் வந்தார்.
நாமக்கல் லோக்சபா தொகுதிக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தார். டிபாசிட் கட்டணம், 25,000 ரூபாய்க்கு, 10 ரூபாய் நாணயங்களை மூட்டையாக கட்டி எடுத்து வந்தார்.
இதை கண்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் திணறினர்.
அந்த நாணயங்களை 10 அலுவலர்கள், ஒரு மணி நேரம் எண்ணி கணக்கிட்டு, 25,000 ரூபாய் இருப்பதை உறுதி செய்தனர். தொடர்ந்து, அவரிடம் இருந்து வேட்பு மனுவை பெற்று, ரசீது வழங்கினர்.
இது குறித்து, ரமேஷ் கூறியதாவது:
இது போன்ற 10 ரூபாய் நாணயங்களை அரசு வெளியிட்டாலும், தமிழகத்தை பொறுத்தவரை அது செல்லாக்காசாக உள்ளது. எங்கும் அதை வாங்க மறுக்கின்றனர்.
விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, 10 ரூபாய் நாணயங்களை, 25,000 ரூபாய் சேகரித்து, அதை கொண்டு வந்து தேர்தல் டிபாசிட் செலுத்தினேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

