/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
சமூக தளத்தில் விவாகரத்து செய்த துபாய் இளவரசி ஷேக்கா மஹ்ரா அமெரிக்க ராப் பாடகரை மணக்கிறார்

ADDED : ஆக 29, 2025 06:38 AM

துபாய்: இன்ஸ்டாகிராம் சமூக வலைதள பதிவின் மூலம் கணவரை விவாகரத்து செய்த துபாய் இளவரசி ஷேக்கா மஹ்ரா, ராப் பாடகருடன் நிச்சயதார்த்தம் செய்துள்ளார்.
மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக்கா முகமது பின் ரஷீத் அல் மக்துாமின் மகள் ஷேக்கா மஹ்ரா, 31. இவர், ஷேக் மனா பின் முகமது என்ற துபாய் இளவரசரை, 2023ல் திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், ஷேக் மனாவுக்கு வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பதாக குற்றஞ் சாட்டிய மஹ்ரா, இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டு, கடந்தாண்டில் விவாகரத்து செய்தார்.
இதைத் தொடர்ந்து, அமெரிக்காவைச் சேர்ந்த ராப் பாடகரான பிரெஞ்சு மொன்டானா, 40, உடன் நெருக்கமாக பழக துவங்கினார். பல பொது நிகழ்ச்சிகளிலும் ஒன்றாக கலந்து கொண்டனர்.
இந்நிலையில், இருவருக்கும் திருமண நிச்சய தார்த்தம் நேற்று நடந்ததாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மொராக்கோவில் பிறந்த பிரெஞ்சு மொன்டானாவின் உண்மையான பெயர் கரீம் கார்பூச். இவரும் திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர். இவருக்கு, 16 வயதில் ஒரு மகன் உள்ளார். பிரெஞ்சு மொன்டானா மற்றும் ஷேக்கா மஹ்ரா.