/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
சுகாதார நிலையத்தில் கலெக்டர் நோயாளி போல் சென்று ஆய்வு
/
சுகாதார நிலையத்தில் கலெக்டர் நோயாளி போல் சென்று ஆய்வு
சுகாதார நிலையத்தில் கலெக்டர் நோயாளி போல் சென்று ஆய்வு
சுகாதார நிலையத்தில் கலெக்டர் நோயாளி போல் சென்று ஆய்வு
ADDED : செப் 17, 2025 12:38 AM

பெரம்பலுார்: பெரம்பலுார் மாவட்டம், கொளக்காநத்தம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண் ஒருவர், அந்த மருத்துவமனையில் முறையான பராமரிப்பில்லாததால், தான் அவதியுறுவதாக பெரம்பலுார் கலெக்டர் மிருணாளினிக்கு, செப்., 12ல், 'வாட்ஸாப்'பில் புகார் செய்தார்.
அன்றிரவு சாதாரண உடையில், தன் சொந்த வாகனத்தில் கொளக்காநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு, கலெக்டர் சென்றார்.
அங்கிருந்த நர்ஸிடம், தனக்கு உடல் நலக்குறைவு என, கூறியுள்ளார். உடலை பரிசோதிக்காமல் ஊசி போட வந்த நர்ஸிடம், 'டாக்டர் இல்லையா... எங்கே?' என கேட்டு, கலெக்டர் கடிந்து கொண்டார். அதன் பின் தான், வந்திருப்பது கலெக்டர் என உணர்ந்த நர்ஸ்கள் திகைத்தனர்.
அங்கு, மருத்துவ பதிவேடுகள் எதுவும் முறையாக பராமரிக்கப்படாமல் இருந்ததை கண்டறிந்த கலெக்டர், நர்ஸ்கள் மீதும், பணி நேரத்தில் மருத்துவமனையில் இல்லாத டாக்டர் மீதும், துறை ரீதியான நடவடிக்கை எடுக்க, சுகாதாரத்துறை துணை இயக்குநருக்கு உத்தரவிட்டார்.