தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/ ரூ.2.60 லட்சத்துக்கு ஏலம் போன தேங்காய்

 ரூ.2.60 லட்சத்துக்கு ஏலம் போன தேங்காய்

 ரூ.2.60 லட்சத்துக்கு ஏலம் போன தேங்காய்


UPDATED : செப் 07, 2026 07:29 AM

ADDED : செப் 06, 2026 11:15 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 07, 2026 07:29 AM ADDED : செப் 06, 2026 11:15 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முதுகுளத்துார்: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அருகே புளியங்குடி கிராமத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி உறியடி பொருட்களின் ஏலம் நடந்தது. இதில் தேங்காய் ஒன்று ரூ.2.60 லட்சத்திற்கு ஏலம் போனது.

புளியங்குடி கிராமத்தில் 44ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி நேற்று உறியடி உற்ஸவம் நடந்தது. உறிப்பானையில் தேங்காய், 5 எலுமிச்சை பழங்கள், தயிர் ஆகிய பொருட்கள் வைக்கப்பட்டன. பின் உறியடித்த பொருட்கள் ஏலம் விடப்பட்டன.

அப்போது புளியங்குடியை சேர்ந்த சந்தோஷ்குசார்-பிரியங்கா தம்பதி தேங்காயை ரூ.2.60 லட்சத்திற்கு ஏலம் எடுத்தனர். இதேபோல் 5 எலுமிச்சை பழங்கள் ரூ.3.70 லட்சம், தார்கம்பு ரூ.45 ஆயிரம், மஞ்சள் கயிறு ரூ.70 ஆயிரம், வடம் கயிறு ரூ.65 ஆயிரம் என மொத்தமாக ரூ.8.10 லட்சத்திற்கு பொருட்கள் ஏலம் போனது.

பக்தர்கள் கூறியதாவது: உறிப்பானையில் உள்ள பொருட்களை ஏலம் எடுத்தால் குழந்தை இல்லாதவருக்கு குழந்தை வரம் கிடைக்கும், தொழில் முன்னேற்றம் அடையும் உள்ளிட்ட நம்பிக்கை உள்ளது. தேங்காய் ரூ.2.60 லட்சத்திற்கு ஏலம் போனது இதுவே முதன்முறை என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us