sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு


PUBLISHED ON : பிப் 08, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 08, 2025 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் நடிகர் விஜய்: சுயலாபத்திற்காக மட்டுமே, ஈ.வெ.ரா., பற்றி பெருமை பேசும் தற்போதைய ஆட்சியாளர்கள், சமூக நீதியை காக்கும் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தும் அதிகாரம் தங்களிடம் இல்லை என்ற வாதத்தை முன்வைத்து வருகின்றனர். மக்கள் தொகை கணக்கெடுப்பை தான் மத்திய அரசு நடத்த வேண்டும். அதற்கு முன்னோட்டமாக, ஜாதிவாரி ஆய்வை மாநில அரசே நடத்தலாம். ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதில் மத்திய, மாநில ஆட்சியாளர்கள் ஒரே நேர்கோட்டில் பயணிக்கின்றனர் என்பதை மக்கள் நன்கு அறிவர்.

டவுட் தனபாலு: அவங்க நேர்கோட்டில் பயணிக்கிறாங்களா, இல்லையான்னு தெரியலை... ஆனா, திருமாவளவன், ராமதாஸ், சீமான்னு பல கட்சிகளின் கொள்கைகளையும் கலந்து கட்டி அடிச்சு, நீங்க எந்த கோட்டில் பயணிக்கிறீங்க என்ற, 'டவுட்'டுக்கு தான் யாருக்கும் விடை தெரியலை!



அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன்: சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, மானாமதுரை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில், மாலை 5:00 மணிக்கு மேல், மருத்துவர்கள் இல்லாதகாரணத்தால், அங்கு வரும்நோயாளிகளுக்கு செவிலியர்களே சிகிச்சை அளித்து வருகின்றனர். அவசர சிகிச்சைக்காக, இரவு அரசு மருத்துவமனைகளை தேடி வரும் நோயாளிகளை, மருத்துவர்கள் பற்றாக்குறை எனக் கூறி, வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதால், பல நோயாளிகளின் உடல்நிலை பாதிக்கப்படுகிறது. எனவே, மருத்துவர் காலியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

டவுட் தனபாலு: 'அவசரத்துக்கு அரசு மருத்துவமனைகளுக்கு போனா உயிருக்கு உத்தரவாதம் இல்லை'ன்னு சொல்றீங்க... தனியார் மருத்துவமனைகள் நல்லாயிருக்கட்டும்னு தான், டாக்டர் பணியிடங்களை அரசு நிரப்புவதில் அலட்சியம் காட்டுறாங்களோ என்ற, 'டவுட்' உங்களுக்கு வரலையா?





தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை: கடந்த சட்டசபை தேர்தலின்போது, 'ஆட்சிக்கு வந்ததும், விவசாய கடன் தள்ளுபடிக்கு முதல் கையெழுத்து போடப்படும்' என, ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்தார். ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் கடந்து விட்டன. இன்று வரை பயிர் கடனை ரத்து செய்யாமல், விவசாயிகளுக்கு துரோகம் செய்கிறது தி.மு.க., அரசு. தி.மு.க.,வின் வாக்குறுதியை நம்பி ஏமாந்து போன விவசாயிகளின் வயிற்றில், தி.மு.க., அடித்திருக்கிறது.

டவுட் தனபாலு: அடுத்த வருஷம் தேர்தல் வருதே... அதுக்கு முன்னோட்டமா, பயிர் கடன்களை தள்ளுபடி பண்ற அறிவிப்பை வெளியிடுவாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us