PUBLISHED ON : டிச 21, 2024 12:00 AM

கோவை தெற்கு தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி: அம்பேத்கரை உண்மையிலேயேமதிப்பவர்கள், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் அதிகாரத்தைவழங்க வேண்டும். பட்டியலினத்தைசேர்ந்த ராம்நாத் கோவிந்தை ஜனாதிபதி ஆக்கியது பா.ஜ., அரசு.இப்போது, பழங்குடியின பெண்மணியை ஜனாதிபதியாக்கிஉள்ளது. ஆனால், அமித்ஷாவுக்குஎதிர்ப்பு தெரிவிக்கும் முதல்வர்ஸ்டாலின், பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரை துணை முதல்வராக்காமல் தன் மகன் உதயநிதியை ஆக்கியது ஏன்?
டவுட் தனபாலு: தப்பி தவறி, பட்டியல் இனத்தை சேர்ந்த ஒருத்தரை தி.மு.க., ஆட்சியில்துணை முதல்வர் ஆக்கிஇருந்தாலும் பெருசா என்ன நடந்திருக்கும்...? உதயநிதிக்கு இப்ப தரப்படும் வானளாவிய அதிகாரம் மற்றும் சுதந்திரத்தை தந்திருப்பாங்களா என்பது, 'டவுட்'தான்!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்உதயகுமார்: தற்போதைய தி.மு.க.,ஆட்சியில் மக்கள் இழந்தஉரிமையை மீண்டும் அ.தி.மு.க.,ஆட்சியில் பெற்றுத் தருவோம். 'அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணிஏற்பட வேண்டும்' என, அ.ம.மு.க.,பொதுச் செயலர் தினகரன்கற்பனை கலந்த கதையை பேசிவருகிறார். பா.ஜ., அல்லாத, மக்கள் விரும்பும் கூட்டணியை பழனிசாமி அமைப்பார்.
டவுட் தனபாலு: 'வரும் 2026 சட்டசபை தேர்தலில், திராவிட கட்சிகள் அல்லாத ஆட்சியை அமைப்போம்'னு அண்ணாமலைஒருபக்கம் சொல்றார்... நீங்க, 'பா.ஜ., அல்லாத கூட்டணி'ன்னு சொல்றீங்க... உங்களுக்கான இந்தமோதல்ல, தி.மு.க., 'ஸ்கோர்' பண்ணிட்டு போயிடுமே என்ற, 'டவுட்' உங்களுக்கு வரலையா?
பா.ம.க., கவுரவ தலைவர் ஜி.கே.மணி: வரும் 28ல் நடக்கஇருக்கும் பா.ம.க., பொதுக்குழுவில், கூட்டணி குறித்து முடிவெடுத்து அறிவிக்கப்படும். பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் குறித்த முதல்வரின் பேச்சு பா.ம.க., நிர்வாகிகளையும், தொண்டர்களையும் புண்படுத்திஉள்ளது.
டவுட் தனபாலு: முதல்வரின் பேச்சால் பா.ம.க.,வினர் புண்பட்டிருப்பதால், தி.மு.க., கூட்டணியில் உங்க கட்சி சேர வாய்ப்பில்லை என்பதை கோடிட்டுகாட்டிட்டீங்க... மிச்சம் இருப்பதுபா.ஜ.,வும், அ.தி.மு.க.,வும் தான்...அதுல சேருவீங்களா அல்லது உங்க கட்சி தலைமையிலயே புதியஅணியை அமைப்பீங்களா என்ற,'டவுட்' வருதே!

