PUBLISHED ON : நவ 23, 2024 12:00 AM

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு: நடிகர் விஜய் கட்சி துவங்கியுள்ளதில் எங்களுக்கு மகிழ்ச்சி. ஒரு இளைஞன், எம்.ஜி.ஆர்., செய்ததுபோல சில காரியங்கள் செய்துள்ளார். இப்போது உள்ள நடிகர்களிடம் இல்லாத குணம், விஜயிடம் இருக்கிறது.
டவுட் தனபாலு: எதிரிகளுக்குக்கூட அள்ளிக் கொடுத்த வள்ளல் எம்.ஜி.ஆர்., எங்கே... தன் கட்சி மாநாட்டுக்கு வந்து உயிரை விட்ட ஆறு தொண்டர்களுக்கும், அஞ்சு பைசா கூட நிவாரண உதவி தராத விஜய் எங்கே... உங்களது இந்த ஒப்பீட்டை, எம்.ஜி.ஆரின் தொண்டர்கள்ஏத்துக்கவே மாட்டாங்க என்பதில்,'டவுட்'டே இல்லை!
தமிழக பா.ஜ., பொதுச்செயலர்கருப்பு முருகானந்தம்: அ.தி.மு.க.,முன்னாள் அமைச்சர் திண்டுக்கல்சீனிவாசன், தங்களுடன் கூட்டணிக்கு வருபவர்கள், 50 முதல் 100 கோடி ரூபாய் வரைகேட்கின்றனர் என கூறியுள்ளார்.அவர்களிடம் பணம் கேட்கும் அவசியம் எங்களுக்கு இல்லை. பா.ஜ., தேசிய கட்சி. 15 கோடிக்கும் அதிகமான உறுப்பினர்களை கொண்ட உலகிலேயே மிகப்பெரிய கட்சி.
டவுட் தனபாலு: அதானே... கர்நாடகாவுல, காங்., ஆட்சியை கவிழ்க்க, எம்.எல்.ஏ.,க்களுக்கு தலா 50 கோடி ரூபாய் பேரம் பேசியதாக, உங்க கட்சியினர் மீது அந்த மாநில முதல்வர் சித்தராமையாவே குற்றம் சாட்டிஇருக்காரு... பணத்தை கொட்டிக்குடுக்கிற இடத்துல இருக்கிற நீங்க, யார்கிட்டயும் வாங்க மாட்டீங்கஎன்பதில், 'டவுட்'டே இல்லை!
தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி: தனிப்பட்ட காரணங்களுக்காக நடக்கும் கொலைகளுக்கும், சட்டம் - ஒழுங்குக்கும் சம்பந்தமில்லை என்பதை, பழனிசாமி புரிந்து கொள்ள வேண்டும். ஓசூரில் வக்கீல் மீதான தாக்குதல், தஞ்சையில் ஆசிரியை கொலைஇரண்டும் தனிப்பட்ட விவகாரங்களின் அடிப்படையில் நடந்தவை. இதை நன்கு அறிந்தபின்பும், தி.மு.க., அரசு மீது எதையாவது குறையாக சொல்லவேண்டும் என்பதற்காக, அபாண்டமாக பழி சுமத்துவதை பழனிசாமி வாடிக்கையாக்கி இருக்கிறார்.
டவுட் தனபாலு: தனிப்பட்ட விவகாரங்கள்ல நடந்த இந்த சம்பவங்கள், நாலு சுவருக்குள்ளநடந்திருந்தா, அரசை யாரும் குற்றம் சொல்ல போறதில்லையே...பொது இடங்களான பள்ளிக்கூடம் மற்றும் நீதிமன்ற வளாகத்துல பட்டப்பகல்ல நடந்ததுதான் எதிர்க்கட்சிகளின் கண்டனத்துக்கு காரணம் என்பதில்,'டவுட்'டே இல்லை!

