தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு


PUBLISHED ON : ஆக 27, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 27, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பா.ஜ.,வின் கலை, கலாசார பிரிவு தமிழக செயலரும், நடிகையுமான கஸ்துாரி:


த.வெ.க.,வுடன் காங்கிரஸ் பிரச்னை செய்து வருகிறது. 'இன்றைய முதல்வர், நாளைய பிரதமர்' என விஜயை அவரது கட்சியினர் கூறியதற்கு, மிகப்பெரிய எதிர்ப்பை காங்கிரஸ் தெரிவித்துள்ளது. எனவே, இடைத்தேர்தலில் த.வெ.க., வென்று தனி பெரும்பான்மை பெற்று விட்டால், தமிழகத்தில் காங்., அமைச்சர்களின் பதவி ஆட்டம் கண்டு விடும்.

டவுட் தனபாலு:


'எட்டாத பழத்துக்கு கொட்டாவி விடக்கூடாது'ன்னு, கிராமங்கள்ல சொல்வாங்க... தற்போதைய பிரதமர் மோடிக்கு நிகரான தலைவர், இந்தியாவில் எந்த கட்சியிலும் இல்லை... அதனால, கிடைக்கவே வாய்ப்பில்லாத பிரதமர் பதவிக்காக காங்கிரசும், த.வெ.க.,வும் அடிச்சுக்கணுமா என்ற, 'டவுட்' தான் வருது!

-----

காங்., கட்சி, சிவகங்கை - எம்.பி., கார்த்தி:


முதல்வர் விஜய் தலைமையிலான அரசுக்கு, போதிய எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு இருப்பதால் அரசு பாதுகாப்பாக உள்ளது. மற்ற கட்சி எம்.எல்.ஏ.,க்களை ராஜினாமா செய்ய வைத்து, அதன் வாயிலாக இடைத்தேர்தலை உருவாக்கி, த.வெ.க.,வில் சேர்ப்பதை நான் ஏற்கவில்லை. ராஜினாமா செய்து விட்டு வருவோருக்கு இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கக்கூடாது. அது தொகுதி மக்களுக்கு செய்யும் அநீதி; ஜனநாயகத்துக்கு ஏற்றதல்ல.

டவுட் தனபாலு:


தி.மு.க., கூட்டணியில் உங்க கட்சி இருந்தப்ப, அன்றைய ஆளுங்கட்சிக்கு எதிராகவே பேசிட்டு இருந்த மாணிக்கம் தாகூர், இன்னைக்கு உங்க கட்சியின் மாநில தலைவராகிட்டாரு... அந்த மாதிரி, ஆளுங்கட்சியை விமர்சனம் பண்ணிட்டே இருந்தால் தான், எதிர்காலத்தில் உங்களுக்கும் பதவி கிடைக்கும்னு நினைக்கிறீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!

-----

மா.கம்யூ., தமிழக செயலர் சண்முகம்:


'பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுக்க வேண்டும்' என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மா.கம்யூ., சார்பில் 31ம் தேதி வரை, தமிழகம் முழுதும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும். முதல்வர் விஜய், முந்தைய ஆட்சியில் நடந்த முறைகேடுகள் குறித்த மூன்று கோப்புகள் தன்னிடம் உள்ளதாக கூறுகிறார். முறைகேடு களுக்கான ஆதாரம் இருந்தால், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விட்டுவிட்டு, எதிர்க்கட்சிகளை அச்சுறுத்துவதை போல அவர் பேசுவது சரியல்ல.

டவுட் தனபாலு:


அது சரி... ஆட்சிக்கு ஒரு பக்கம் ஆதரவும் குடுத்துட்டு, மறுபக்கம் இப்படி போராட்டங்களும், விமர்சனங்களும் பண்ணிட்டே இருந்தால் எப்படி...? உங்களை மாதிரி ஆட்களை நம்பி ஆட்சியை நடத்த முடியாதுன்னு தான், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கு த.வெ.க., தரப்பு வலை வீசுது என்பதில், 'டவுட்'டே இல்லை!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us