தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

1


PUBLISHED ON : ஆக 10, 2026 12:30 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 10, 2026 12:30 AM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அ.தி.மு.க.,வைச் சேர்ந்த, முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்: முதல்வர் விஜய் ஆட்சி, சும்மா ஆட்சி. சும்மா இருப்பதை மறைப்பதற்காக, 'அம்மா ஆட்சி' என சொல்கின்றனர். பல்வேறு பிரச்னைகளுக்காக, ஆட்சியில் இருந்தபோதும், இல்லாதபோதும், சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி கண்டவர் ஜெயலலிதா. தமிழர்கள் பாதிக்கப்பட்டால், தானே பாதித்ததை போல நடவடிக்கை எடுத்தவர். அவரது ஆட்சியை, விஜய் ஆட்சியுடன் ஒப்பிடக் கூடாது; இதுவரை இருந்த முதல்வர்களில் மோசமான முதல்வர் விஜய் தான்.

டவுட் தனபாலு: அது சரி... 'இருந்ததிலேயே மோசமான முதல்வர் விஜய்'னு சொல்றீங்களே... அப்படி என்றால், உங்களது பரம எதிரியான தி.மு.க., சார்பில் முதல்வராக இருந்த ஸ்டாலின், 'விஜயை விட தேவலாம்'னு சொல்ல வர்றீங்களோ என்ற, 'டவுட்' வருதே!

த.வெ.க.,வைச் சேர்ந்த, தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ்: 'டாஸ்மாக்' கடை பணியாளர்கள் பணிச்சுமையை குறைப்பதற்கும், பணம் வாங்குவதில் உள்ள சிரமங்களை தடுப்பதற்கும் தான், 'ஆன்லைன்' வாயிலாக மது வகைகளை தேர்வு செய்து, பணம் செலுத்தி வாங்கும் வசதி தொடங்கப்பட உள்ளது. பணம் செலுத்தியதற்கான, 'கியூஆர்' குறியீட்டை கடையில் காட்டினால், மது வகைகள் வழங்கப்படும். இதனால், மது பாட்டிலுக்கு கூடுதலாக, 10 ரூபாய் வாங்குவதும் தடுக்கப்படும்.

டவுட் தனபாலு: 'டாஸ்மாக்' மதுபானங்கள் வாங்கும் முறையை, எந்த அளவுக்கு சிரமமாக்க முடியுமோ, அந்த அளவுக்கு சிரமமாக்கினா தானே, குடிக்கிறவங்க எண்ணிக்கை கொஞ்சமாவது குறையும்... உங்க நடவடிக்கைகளை எல்லாம் பார்த்தால், புதுசா நிறைய குடிகாரர்களை உருவாக்க, இலக்கு நிர்ணயம் பண்ணி செயல்படுறீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!

பா.ஜ., லோக்சபா எம்.பி., ரவிசங்கர் பிரசாத்: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பார்லிமென்டிற்கு நாள்தோறும் வருகிறார். எதிர்க்கட்சியினரின் கேள்விகளுக்கு பதிலளிக்க, அவர் தயாராகவே உள்ளார். ஆனாலும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் உள்ளிட்டோர், பார்லிமென்டின் செயல்பாடுகளை முடக்குவதற்காகவே, அமித் ஷா பற்றி தவறான பிம்பத்தை ஏற்படுத்துகின்றனர்.

டவுட் தனபாலு: பார்லிமென்டில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடத்தி, மக்களுக்கு நல்லது நடந்துட்டா, அதற்கான பாராட்டுகள் முழுக்க மத்திய பா.ஜ., அரசுக்கு போயிடுமே... அதனால தான், காங்., தலைவர்கள் வீண் வம்புகளை இழுத்து, பார்லிமென்டை முடக்குறாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us