sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

5


PUBLISHED ON : மே 31, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 31, 2026 12:00 AM

5


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய கம்யூ., கட்சி மாநில செயலர் வீரபாண்டியன்: ஆளும் த.வெ.க., தரப்புக்கு ஆதரவாக, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களை இழுப்பது ஜனநாயக விரோதம். சட்ட விதிகளுக்கு எதிரான இச்செயலை ஏற்க முடியாது. கட்சி மாறி வந்த எம்.எல்.ஏ.,க்களுக்கு, இடைத்தேர்தலில் த.வெ.க., வாய்ப்பளித்தால், அந்த சூழலில் எங்கள் நிலைப்பாட்டை முடிவு செய்வோம்.

டவுட் தனபாலு: நீங்களும், மா.கம்யூ., - வி.சி., கட்சியினரும் தி.மு.க., கூட்டணியில் பல வருஷங்களா இருந்தவங்க... இன்னும் தி.மு.க.,வுடன் நட்பில் இருக்கீங்க... நாளைக்கே தி.மு.க., பேச்சை கேட்டு, 'ஆட்சிக்கான ஆதரவு வாபஸ்'னு அறிவிச்சிட்டா என்னாகும்னு பயந்து தான், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களை இழுத்துட்டு இருக்காங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!

த.மா.கா., தலைவர் வாசன்: 'மேகதாதுவில் அணை கட்டுவோம்' என்ற கர்நாடக துணை முதல்வர் சிவகுமாரின் பேச்சு, தமிழக விவசாயிகளை கொந்தளிக்கச் செய்துள்ளது. காவிரி நீர் இல்லாவிட்டால், தமிழக டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகி விடும் என தெரிந்தே, கர்நாடக காங்., அரசு வீண் பிடிவாதம் பிடிக்கிறது. மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என, கர்நாடக காங்., அரசை தமிழக முதல்வர் விஜய் வலியுறுத்த வேண்டும்.



டவுட் தனபாலு: மேகதாது அணை விவகாரத்தில் உடும்பு பிடியாக இருக்கும் சிவகுமார், இப்ப கர்நாடகாவில் முதல்வராக போறாரு... இனியும் தமிழக முதல்வர் விஜய் அமைதியா இருக்காம, சோனியா, ராகுல் போன்ற காங்., மேலிட தலைவர்களிடம் பேசி, சிவகுமாரின் வேகத்தை கட்டுப்படுத்தணும் என்பதில், 'டவுட்'டே இல்லை!

காங்., தரவு பகுப்பாய்வு பிரிவு தேசிய தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி: டில்லியில் காங்., தலைவர்களை முதல்வர் விஜய் சந்திக்கவில்லை என, நாங்கள் எந்த குற்றச்சாட்டும் எழுப்பவில்லை. அப்படியான சந்திப்பு நடக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவலை நாங்கள் வெளியிடவும் இல்லை. மே 27ம் தேதி மாலை 6:00 மணிக்கு மேல், நேரமின்மையால் ராகுல் -- விஜய் சந்திப்பு நடக்கவில்லை.

டவுட் தனபாலு: சாயந்தரம், 6:00 மணிக்கு மேல ராகுல் யாரையும் பார்க்க மாட்டாரா என்ன...? தமிழகத்தில், 59 வருஷங்களுக்கு பிறகு உங்க கட்சிக்கு ஆட்சியில் பங்கு தந்திருக்கும் முதல்வர் விஜயை பார்க்கிறதை விட, ராகுலுக்கு அப்படி என்ன தலை போற வேலை என்ற, 'டவுட்' தான் வருது!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us