sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஏப்ரல் 16, 2026 ,சித்திரை 3, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

டவுட் தனபாலு

/

 'டவுட்' தனபாலு

/

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு


PUBLISHED ON : ஏப் 16, 2026 12:00 AM

Google News

PUBLISHED ON : ஏப் 16, 2026 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடிகர் ராமராஜன்: நான் என்றும் மதிக்கும் தெய்வங்களான, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் நடப்பதே என் ஆயுள் உறுதிமொழி. இந்த தேர்தலில், மதுரை மேலுார் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும், என் திரையுலக வாழ்வுக்கு காரணமாக இருந்த தியேட்டர் முதலாளி அம்பலக்காரரின் மகன் முருகனுக்கும், தென்காசி மாவட் டம் , ஆலங்குளம் தொகுதி யில் த.வெ.க., சார்பில் போட்டியிடும், என் 35 ஆண்டு கால நண்பர் கருணாகர ராஜாவின் சகோதரர் வைகுண்ட ராஜாவின் மகன் விபின் சக்கரவர்த்திக்கும் மட்டும் பிரசாரம் செய்து வருகிறேன்.

டவுட் தனபாலு: அது சரி... 'நான், அ.தி.மு.க.,வில் இருந்தாலும், நண்பர்களுக்காக ரெண்டு தொகுதிகளில் மட்டும் பிரசாரம் செய்றேன்'னு சொல்றீங்களே... நீங்க பண்ற பிரசாரத்தால மட்டுமே, அந்த ரெண்டு பேரும் ஜெயிக்க முடியும்னு அப்பாவியா நம்பிட்டு இருக்கீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!

பத்திரிகை செய்தி: ஜனநாயகன் படம், இணையதளத்தில் சட்ட விரோதமாக கடந்த வாரம் வெளியானது. விஜயின் உதவியாளர் ஜெகதீஷும் படத்தின் இணை தயாரிப்பாளர் என்பதால், விஜய் தரப்பும் நஷ்டமடைந்துள்ளது. எனவே, இதை ஈடுசெய்ய, தேர்தலுக்கு பின் நடிக்க, விஜய் திட்டமிட்டுள்ளார். தேர்தல் முடிவு வெளியான ஓரிரு வாரங்களில், விஜயின் அடுத்த படத்துக்கான பூஜை நடக்க வாய்ப்பு உள்ளதாக த.வெ.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

- டவுட் தனபாலு: அது சரி... தேர்தலில் ஜெயித்து, கோட்டையில் கொடியேற்ற திட்டமிட்டவர், திடீர்னு, 'ரூட்' மாறுவது ஏன்... விஜயின் பல பிரசார கூட்டங்கள் அடுத்தடுத்து ரத்து, போற ஊர்கள்லயும் பேச முடியாம திரும்புறதுன்னு, தேர்தல் முடிவுகள் தன் கட்சிக்கு சாதகமா இருக்காது என்பதை இப்பவே கணிச்சிட் டாரோ என்ற, 'டவுட்'தான் வருது!

த.வெ.க., தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா: தி.மு.க., தலைமையின் குடும்ப நிறுவனம் தயாரித்த, பராசக்தி படத்துக்காக, பா.ஜ., ஒத்துழைப்போடு, ஜனநாயகன் படத்தின் ரிலீஸை தடுத்தனர். தற்போது, இணையதளங்களில், ஜனநாயகன் படம் சட்டவிரோதமாக வெளியானதிலும், தி.மு.க., - பா.ஜ.,வின் கூட்டு சதி உள்ளது.



டவுட் தனபாலு: 'நடிகர் விஜயை கண்டு, மிகப்பெரிய கட்சிகளான தி.மு.க.,வும், பா.ஜ.,வும் பயந்துடுச்சு'ன்னு சொல்ல வர்றாரா... நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்ட இந்த கட்சிகளுக்கு, விஜய் படம் வெளிவராம தடுக்கிறதை தவிர, வேற வேலை இல்லன்னு நினைச்சிட்டாரோ என்ற, 'டவுட்'தான் வருது!






      Dinamalar
      Follow us