sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

1


PUBLISHED ON : ஏப் 04, 2026 03:34 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 04, 2026 03:34 AM

1


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அ.தி.மு.க., வழக்கறிஞர் பிரிவு செயலர் இன்பதுரை: பதற்றமான ஓட்டுச்சாவடிகள் இருக்கும் பகுதிகளில், மத்திய பாதுகாப்பு படை பேரணி நடத்தப்படும்; தேர்தல் பார்வையாளர்களின் சிறப்பு கண்காணிப்பு இருக்கும்; அங்குள்ள ரவுடிகள் சிறையில் அடைக்கப்படுவர்; இதனால், பயமின்றி பொதுமக்கள் ஓட்டளிக்க முன்வருவர். ஆனால், உதயநிதி போட்டியிடும் சேப்பாக்கம் தொகுதியில், 2024ல் நடந்த லோக்சபா தேர்தலின்போது, 22 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவை என, வகைப்படுத்தப்பட்டு இருந்தன. தற்போது, பதற்றமான ஓட்டுச்சாவடிகள் பட்டியலில், அவை நீக்கப்பட்டுள்ளன.

டவுட் தனபாலு: தேர்தல் அதிகாரிகள் கண்காணிப்பை தவிர்க்கவும், ரவுடிகளை தங்களுக்கு ஆதரவாக தேர்தல் பணி செய்யவும், பதற்றமான ஓட்டுச்சாவடிகளை பட்டியல்ல இருந்து நீக்கிட்டாங்களோ என்ற, 'டவுட்' வருது... தேர்தல் கமிஷன் கட்டுப்பாட்டில் அதிகாரிகள் இருந்தாலும், தி.மு.க., அரசுக்கு விசுவாசமாகவே பலர் இருக்காங்க என்பதும், 'டவுட்' இல்லாம தெரியுது!



ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ: சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் ம.தி.மு.க.,வுக்கு நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. சீர்காழியில் தனி சின்னத்திலும், மற்ற மூன்று தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலும், ம.தி.மு.க., போட்டியிடும் என, ஒப்பந்தம் செய்யப்பட்டது. தற்போது, சீர்காழி தொகுதி, ம.தி.மு.க., வேட்பாளர் செந்தில்செல்வனும், உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடுவார்.



டவுட் தனபாலு: தற்போதைய நிலவரப்படி, ஒரு தொகுதியில், 20 முதல் 25 கோடி ரூபாய் வரை செலவழித்தால் தான் ஜெயிக்க முடியும்... உதயசூரியன் சின்னத்தில் நின்றால், தேர்தல் செலவை தி.மு.க.,வே ஏத்துக்கும் என்பதால், சீர்காழியையும் தி.மு.க., சின்னத்துக்கே தாரைவார்த்துட்டீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!



அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி: கடந்த, 2021 சட்டசபை தேர்தலில், தி.மு.க., அளித்த, 525 வாக்குறுதிகளில், நான்கில் ஒன்றை கூட நிறைவேற்றவில்லை. அ.தி.மு.க., அரசு அமைந்ததும் அனைத்து ரேஷன் கார்டுதாரருக்கும், தலா 10,000 ரூபாய் வழங்கப்படும். மகளிர் உரிமைத்தொகை மாதம், 2,000 ரூபாயாக உயர்த்தப்படும்.

டவுட் தனபாலு: இந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற, பல ஆயிரம் கோடி ரூபாய் செலவாகுமே... ஏற்கனவே, தமிழக அரசுக்கு, 10 லட்சம் கோடி ரூபாய் கடன் இருக்குது... கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றணும்னு, நீங்களும் கடன் மேல கடன் வாங்கி, தமிழகத்தை மீளாத கடன் சுமையில தள்ளிடுவீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us