sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

டவுட் தனபாலு

/

 'டவுட்' தனபாலு

/

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு


PUBLISHED ON : மார் 29, 2026 03:04 AM

Google News

PUBLISHED ON : மார் 29, 2026 03:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு: 'சிலர் சிரிப்பார்; சிலர் அழுவார்' என்பது போலத்தான் தி.மு.க., கூட்டணி கட்சிகள் உள்ளன. ஆனால், அ.தி.மு.க., கூட்டணி கட்சிகள், தொகுதி பங்கீட்டை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டுள்ளன. அவர்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள இடங்களையே தந்துள்ளோம்.

டவுட் தனபாலு: தி.மு.க.,வின் முக்கிய அமைச்சர்களின் தொகுதிகளை எல்லாம், கூட்டணி கட்சிகளுக்கு சாமர்த்தியமா தள்ளிவிட்டுட்டு, 'வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை தந்திருக்கோம்'னு சொல்றீங்களே... கூட்டணி கட்சிகள் எல்லாம் நிறைய இடங்கள்ல ஜெயிச்சு வந்துட்டா, ஆட்சியில் பங்கு கேட்பாங்கன்னு பயந்து போய், தேர்தல் களத்துலயே அவங்க, 'கதை'யை முடிக்க பார்க் கிறீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!

lll

பா.ஜ., மகளிர் அணி தேசிய தலைவர் வானதி: நடிகர் கமல், தனி கட்சி ஆரம்பித்து, தன் சுயநலத்திற்காக தி.மு.க., கூட்டணியில் சேர்ந்து, ராஜ்யசபா எம்.பி.,யாகி விட்டு, கட்சிக்காக உழைத்தவர்களை, 'அம்போ' என கைவிட்டு விட்டார். தன் கட்சிக்கு கூட விசுவாசமாக இல்லாமல், தொண்டர்களை ஏமாற்றி வீணாக போனதற்கு, கமல் சிறந்த உதாரணம்.

டவுட் தனபாலு: உலகத்துலயே தன் வீட்டு மொட்டை மாடியிலேயே, கட்சியின் பொதுக்குழுவை நடத்திய தலைவர் கமல் ஒருத்தரா தான் இருப்பார்... அவர் கட்சியில தொண்டர்கள் இருக்காங்கன்னு நீங்க சொல்றதை, கமலே ஏத்துக்குவாரா என்பது, 'டவுட்'தான்!

lll



பா.ம.க., நிறுவனர் ராமதாசின் தேர்தல் அறிக்கை: நாங்கள் ஆட்சிக்கு வந்தால், வன்னியர்களுக்கு, 10.5 சதவீத இடஒதுக்கீடு; முதியோர், ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற குழந்தைகளுக்கு மாதாந்திர உதவித்தொகை 3,000 ரூபாய் வழங்கப்படும். அனைத்து குடும்பத் தலைவியருக்கும் மாதந்தோறும் 3,000 ரூபாய்; கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி நகரங்களில், மெட்ரோ ரயில் சேவை கொண்டு வரப்படும்.

டவுட் தனபாலு: உலகமே தலைகீழா புரண்டாலும், கண்டிப்பா நீங்க ஆட்சிக்கு வர போவதில்லை... அதனால, கொடுக்கிற வாக்குறுதிகளை தாராளமா தரலாமே... 'மகளிருக்கு மாதம், 1 லட்சம் ரூபாய் உதவித்தொகை, திண்டிவனம் - விழுப்புரம் இடையே மெட்ரோ ரயில் சேவை'ன்னு வாக்குறுதிகளை வாரி வழங்குவதில், உங்களுக்கு என்ன தயக்கம் என்ற, 'டவுட்'தான் வருது!

lll






      Dinamalar
      Follow us