sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

3


PUBLISHED ON : மார் 08, 2026 01:37 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 08, 2026 01:37 AM

3


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழக பா.ஜ., பொதுச் செயலர் ராம சீனிவாசன்: பன்னீர்செல்வம், தி.மு.க.,வில் இணைந்தது ஒரு நாள் செய்தி மட்டுமே. அவரது செல்வாக்கு என்னவென்று அனைவருக்கும் தெரியும். பன்னீர்செல்வத்தால் தி.மு.க.,விற்கு பயனில்லை என்பது, தேர்தலுக்கு பின் உறுதியாகிவிடும். பன்னீர்செல்வத்தை, பழனிசாமி துணை முதல்வர் ஆக்கினார். ஸ்டாலின் மீண்டும் முதல்வரானால், பன்னீர்செல்வத்தை துணை முதல்வர் ஆக்குவாரா?

டவுட் தனபாலு: முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, கருணாநிதி காலத்துல இருந்து, அரசியல்ல இருக்கும் துரைமுருகனையே துணை முதல்வர் ஆக்காதவங்க, பன்னீர்செல்வத்தை மட்டும் ஆக்கிடுவாங்களா... துணை முதல்வர் பதவி என்பது கருணாநிதி குடும்பத்துக்கு மட்டுமே என்பது இவருக்கு தெரியாதா என்ற, 'டவுட்'தான் வருது!

பத்திரிகை செய்தி: கர்நாடக மாநில அ.தி.மு.க., செயலராக இருந்த புகழேந்தி, சசிகலாவின் ஆதரவாளராக இருந்தார். பின், தினகரன், பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்பட்டார். பன்னீர்செல்வம், தி.மு.க.,வில் இணைந்த நிலையில், புரட்சி அ.தி.மு.க., என்ற புதிய கட்சியை புகழேந்தி துவக்கி உள்ளார். பன்னீர்செல்வத்துடன் இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன், அண்ணா எம்.ஜி.ஆர்., - அ.தி.மு.க., என்ற கட்சியை துவக்கி உள்ளார். சசிகலா, புதிய கட்சியை துவக்க போவதாக அறிவித்துள்ளார்.

டவுட் தனபாலு: பன்னீர்செல்வத்துடன் இருந்த பலரும், ஆளுக்கொரு கட்சியை துவங்கியிருக்காங்க... அவங்களுக்கு தலைவரா இருந்த பன்னீர்செல்வம் மட்டும், பழுத்த மரமான தி.மு.க., நிழலில் தஞ்சம் புகுந்துட்டாரே... அந்த வகையில், அவர் விபரமானவர் தான் என்பதில், 'டவுட்'டே இல்லை!



நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: தமிழக மக்கள் அடிமைப்பட்டு கிடக்கின்றனர். இங்கே அரசியல் என்பது இலவசத்துக்கானதாக உள்ளது. நாட்டின் அரசியல் தலைவரை, ஜாதியும், மதமும், பணமும், சாராயமும் தான் தேர்வு செய்யும் என்றால், அவை எப்படி அரசியலாகும். தி.மு.க., - அ.தி.மு.க., இரண்டும் ஒழிக்கப்பட வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உரிமை, கருணை, குருணைத் தொகை எல்லாம் கிடையாது.

டவுட் தனபாலு: இலவசங்கள் கொடுத்து, நம்ம மக்களை திராவிட கட்சிகள் பழக்கி வச்சிருக்கு... நீங்க வந்து, இதை எல்லாம் நிறுத்துவோம்னு சொன்னா, வாங்கியே பழக்கப்பட்ட மக்கள் உங்களுக்கு ஓட்டு போடுவாங்களா... இதனால, வர்ற தேர்தல்ல உங்க கட்சி வேட்பாளர்களுக்கு, 'டிபாசிட்' தொகையாவது தேறுமா என்பது, 'டவுட்'தான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us