PUBLISHED ON : ஆக 24, 2025 12:00 AM

தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைவர் விஜய்: 'ரெய்டு' வந்தால், இதுவ ரை போகாத டில்லி மீட்டிங் கிற்கு ஸ்டாலின் போகிறார். அப்புறம் அந்த பிரச்னை காணாமல் போய்விடும். ஸ்டாலின் அங்கிள்... வாட் அங்கிள்... ராங் அங்கிள். ஒரு தவறு செய்தால்... அதை தெரிந்து செய்தால்... கபட நாடக அங்கிளே... மனசாட்சி இருந்தால் பதில் சொல் லுங்க. 'வொர்ஸ்ட் அங்கிள்' நீங்க. கபட நாடக தி.மு.க., ஆட்சியை, 2026 தேர்தலில் வீட்டுக்கு அனுப்புவோம்.
டவுட் தனபாலு: அது இருக்கட்டும்... 'சினிமாவில் சம்பாதித்த பல நுாறு கோடி ரூபாய்க்கு நீங்க முறையா வரு மான வரி கட்டியிருக்கீங்களா விஜய் பிரதர்... நெய் வேலியில் ஷூட் டிங்கில் இருந்த உங்களை, வருமான வரி அதிகாரிகள் கொத்தா சென் னைக்கு அள்ளிட்டு வந்து, கணக்கு கேட்டு கிண்டி கிழங்கெடுத்தாங்களே விஜய் பிரதர்... வெளிநாட்டு காரை இறக்குமதி பண்ணிட்டு, வரி கட்டாம ஏய்க்க பார்த்த உங்க தலையில உயர் நீதிமன்றம் ஓங்கி குட்டுச்சே விஜய் பிரதர்'னு, தி.மு.க.,வினர் திருப்பியடிச்சா நீங்க தாங்குவீங்களா என்ற, 'டவுட்' வருதே!
தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி: கல்லுாரி மாணவர்கள் துவங்கி, குடும்ப தலைவர்கள் வரை பலர், 'ஆன்லைன்' சூதாட்டத்திற்கு அடிமையாகி, தங்களது பணத்தை இழந்ததுடன், இன்னுயிரையும் மாய்த்து கொண்டனர். இதற்கு முற்றுப் புள்ளி வைக்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவில், ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம், தமிழக சட்டசபை யில் நிறைவேற்றப்பட்டது. தற்போது, மத்திய அரசும் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்திருப்பது, முதல்வர் ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி.
டவுட் தனபாலு: தமிழக அரசு நிறைவேற்றிய சட்டத்தால், ஆன்லைன் சூதாட்டங்களை தடுக்க முடியலையே... அதன் பிறகும், எத்தனையோ பேர் தமிழகத்தில் தற்கொலை பண்ணியிருக்காங்களே... இப்ப, மத்திய அரசு கொண்டு வந்த சட்டம் தான், ஆன்லைன் சூதாட்டத்துக்கு ஆப்பு அடிக்கும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: தேர்தலில் போட்டியிட்டு வென்று, மக்கள் பிரதிநிதியாக அமைச்சர், முதல்வர் என பதவிக்கு வருவோர், குற்றச் செயல்களில் ஈடுபட்டால், பதவி நீக்கம் செய்வது என்பது ஏற்புடையது தான். இது போல, தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் வேட்பாளர், அடுத்த, 10 ஆண்டுகள் தேர்தலில் நிற்கக் கூடாது என்ற சட்டத்தையும் மத்திய அரசு கொண்டு வர வேண்டும்.
டவுட் தனபாலு: வாஸ்தவம் தான்... அதே நேரம், மக்கள் பிரதி நிதியாக எந்த பதவியும் வகிக்காம, கட்சி மட்டும் நடத்தி, அதை வச்சே கோடிக்கணக்குல சொத்து குவிக்கிறவங்களையும் தண்டிக்க மத்திய அரசு ஒரு சட்டம் கொண்டு வந்தால், நம்ம நாட்டுல பல கட்சிகள் காணாம போயிடும் என்பதில், 'டவுட்'டே இல்லை!