sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டவுட் தனபாலு

/

'டவுட்' தனபாலு

/

'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு

7


PUBLISHED ON : அக் 04, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : அக் 04, 2024 12:00 AM

7


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழக சட்டத் துறை அமைச்சர்ரகுபதி: 'காந்தி மண்டபம் முறையாக பராமரிக்கப்படவில்லை' என, கவர்னர் கூறும் குற்றச்சாட்டு தவறானது. ராத்திரியில் நடைபெறும் தவறுகளுக்கு நாங்கள் பொறுப்பேற்கமுடியாது. நாங்கள், காந்தி மண்டபம் உள்ளிட்ட கடற்கரை சாலைகளில் உள்ள முக்கிய இடங்களில் தினமும் மாநகராட்சிசார்பில் துாய்மைப்படுத்தும் பணி நடத்துகிறோம். திருடர்கள் சுவர் ஏறி குதித்து, இரவில் திருடினால் அதற்கு நாங்கள் எவ்வாறு பொறுப்பேற்க முடியும்?

டவுட் தனபாலு: பொறுப்பானஅமைச்சர் பதவியில இருந்துட்டு,இப்படி, 'பொறுப்பில்லாம' பேசுறீங்களே... 'ராத்திரியில திருடினா, தமிழக அரசு நடவடிக்கை எடுக்காது'ன்னு பக்கத்து மாநில திருடனுங்க எல்லாம் வண்டி பிடிச்சு இங்க வந்துட மாட்டாங்களா என்ற, 'டவுட்'தான் வருது!



பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: மத்திய அரசின், 573 கோடி ரூபாய் நிதி வரவில்லை எனக் கூறி, தமிழகத்தில் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில் பணியாற்றும்ஆசிரியர்கள், பணியாளர்கள், 32,500 பேருக்கு செப்டம்பர் மாத சம்பளம் வழங்கப்படவில்லை.சம்பளம் வழங்காமல், அவர்களைதவிக்க விட்டிருப்பதை பார்க்கும்போது, இப்பிரச்னையை தீர்ப்பதற்கு பதிலாக, பெரிதுபடுத்திஅரசியல் லாபம் தேட, தமிழக அரசு முயற்சிப்பது உறுதியாகிறது.

டவுட் தனபாலு: தமிழக அரசின் ஒரு நாள், 'டாஸ்மாக்' விற்பனையே, 100 கோடி ரூபாயை தாண்டுது...அஞ்சாறு நாள் மது விற்பனை பணத்தை எடுத்தாலே, 573 கோடிரூபாயை தேத்திடலாமே... அப்படியும் சம்பளம் வழங்காம இழுத்தடிக்கிறதால, அந்த 32,500 பேர், அவங்களது குடும்ப ஓட்டுகள் அடுத்த தேர்தலில், தி.மு.க.,வுக்கு விழுமா என்பது, 'டவுட்'தான்!



தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை: அமெரிக்கா சுற்றுப்பயணம் சென்றிருந்த ராகுல், பேசாததை எல்லாம் பேசியதாகதிரித்து, உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பி வருகின்றனர். பா.ஜ.,வினரின் பொய் பிரசாரங்கள், அவதுாறு பேச்சுகளை கண்டித்தும்,ஆர்.எஸ்.எஸ்., - பா.ஜ., சித்தாந்தத்தை எதிர்த்தும், அக்., 2ல் துவங்கி 9ம் தேதி வரை, அமைதி பேரணி நடத்துகிறோம்.

டவுட் தனபாலு: உங்க, 'மாஜி' தலைவர் கே.எஸ்.அழகிரி, நாலு பேரோட போய் ரயிலை மறிச்ச மாதிரி இல்லாம, லட்சக்கணக்கான தொண்டர்களை திரட்டி, அமைதி பேரணி நடத்தி உங்க கெத்தை காட்டுவீங்களா என்ற, 'டவுட்' வருதே!








      Dinamalar
      Follow us