தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டவுட் தனபாலு/‘டவுட்’ தனபாலு: நவ. 10

‘டவுட்’ தனபாலு: நவ. 10

‘டவுட்’ தனபாலு: நவ. 10

2


PUBLISHED ON : நவ 10, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 10, 2026 12:00 AM

2


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: திரைப்பட உருவாக்கத்தின் பின்னால் உள்ள உழைப்பையும், தயாரிப்பாளர்கள் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிகளையும், திரைத்துறையைச் சேர்ந்தவனாக நானும் அறிவேன். காலை 6:00 மணி காட்சிக்கு ஆதரவாக தயாரிப்பாளர்கள் சங்கம் கூறிய காரணங்களை என்னால் ஏற்க முடியாவிட்டாலும், அவர்கள் கோரிக்கையை முதல்வர் விஜய் ஏற்று அனுமதி வழங்கியதாக தெரிவித்துள்ளதால், இது குறித்து மேலும் கருத்து சொல்லாமல் மவுனமாகிறேன்.

டவுட் தனபாலு: அது சரி... என்ன தான் ஆயிரம் காரணங்களை அடுக்கினாலும், பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாடாம, அதிகாலை 6:00 மணிக்கே தியேட்டர் வாசலுக்கு ரசிகர்களை வரவழைப்பதும், ரசிகர்களும் அங்கு போய் குத்தாட்டம் போடுவதும் எந்த வகையிலும் ஏத்துக்கவே முடியாது என்பதில், ‘டவுட்’டே இல்லை!

lll

த.வெ.க., கூட்டணியில் இருக்கும் காங்.,கைச் சேர்ந்த, தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன்: ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு நடக்க வேண்டிய அவமானம், ஐந்து மாதங்களில் நடந்ததாக முன்னாள் முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். ஒரு ஆட்சிக்கு ஆறு மாதம் கூட அவகாசம் தராமல், ஆட்சியமைத்த நாளில் இருந்தே, முதல்வர் விஜயுடன், ஸ்டாலின் சண்டையிட்டுக் கொண்டே இருக்கிறார்; ஏன் இப்படி பேசுகிறார் என்று தெரியவில்லை?

டவுட் தனபாலு: வழக்கமா தி.மு.க., ஆட்சி வீட்டுக்கு போய், அ.தி.மு.க., ஆட்சிக்கு வர்றப்ப, மூணு, நாலு வருஷங்கள் கழிச்சு தான் தி.மு.க.,வினரின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுக்கும்... ஆனா, ஐந்தே மாதங்களில் த.வெ.க., அரசு நடவடிக்கை எடுப்பதால், ஸ்டாலினுக்கு அது அஞ்சு வருஷம் போல தெரியுது என்பதில், ‘டவுட்’டே இல்லை!

lll

காங்., தமிழக இளைஞரணி துணை தலைவர் பதவியிலிருந்து, ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ள தினேஷ்: காங்., தமிழக இளைஞரணி தலைவர் சூர்யபிரகாஷ், அக்., 29ம் தேதி தான், ‘வாட்ஸாப்’ குழுவில் டில்லி பேரணிக்கு ராகுல் செல்லும் தகவலை பதிவிட்டார். விமான டிக்கெட் 20 ஆயிரம் ரூபாய் வரை இருந்தது. இதனால், தமிழகத்தில் 35 மாநில நிர்வாகிகள், 64 மாவட்ட நிர்வாகிகள் டில்லி பேரணிக்கு செல்ல முடியவில்லை. இதற்காக, எங்களிடம் விளக்கம் கேட்காமல் சஸ்பெண்ட் செய்துள்ளனர்.

டவுட் தனபாலு: தமிழகத்தில் காங்கிரஸ் இளைஞரணிக்கு அதிகபட்சம் ஆயிரக்கணக்கில் தான் உறுப்பினர்கள் இருப்பாங்க... இப்படி நுாற்றுக்கணக்கானவங்களை சஸ்பெண்ட் பண்ணிட்டா, அவங்க எல்லாம் ஆளுங்கட்சியான த.வெ.க.,வுக்கு தாவிட மாட்டாங்களா...? இதை பத்தி எல்லாம் ராகுல் யோசனை பண்ண லையோ என்ற, ‘டவுட்’ தான் வருது!

lll

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us