sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு


PUBLISHED ON : மார் 25, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 25, 2024 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி: பா.ம.க., தலைவர் அன்புமணி, வேடந்தாங்கல் பறவை போல, அடிக்கடி கூட்டணியை மாற்றி வருகிறார். தண்ணீர் இருக்கும் இடத்தை தேடி பறவைகள் செல்லும். அதுபோல கூட்டணி வைத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. அக்கட்சி நிறுவனர் ராமதாஸ், பா.ஜ.,வுக்கு பூஜ்ஜியம் மதிப்பெண் தான் கொடுத்தார்; தற்போது அவர்களுடன் கூட்டணி வைத்துள்ளார்.

டவுட் தனபாலு: 'அடிக்கடி கூட்டணி மாறும் அன்புமணியை, எதிர்காலத்தில் எந்த தேர்தலிலும், அ.தி.மு.க., கூட்டணியில் சேர்த்துக்கவே மாட்டோம்'னு சொல்ற துணிவு உங்களுக்கு இருக்குதா என்ற, 'டவுட்' எழுதே!

நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: 'ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியாது' என்கின்றனர். தரையில் இருந்து இயக்கி, விண்வெளிக்கு ராக்கெட்டை அனுப்பும் போது, ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் எதுவும் செய்ய முடியாதா... ஓட்டுப்பதிவு இயந்திரத்தை, ஒரு நாள் சாலையில் போட்டு உடைக்கும் காலம் வரும்.

டவுட் தனபாலு: ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியும்னு சொல்ற நீங்க, ஓட்டுப்பதிவு இயந்திரம் இருக்கிற வரைக்கும், தேர்தலை புறக்கணிக்கிறேன்னு அறிவிச்சிடலாமே... இதனால, உங்க கட்சியின் வேட்பாளர்களுக்கு, 'கட்டுத்தொகை' அதாங்க, 'டிபாசிட்' பணம் மிச்சமாகும் என்பதில், 'டவுட்'டே இல்லை!

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்: லோக்சபா தேர்தலில் தொண்டர்களை களம் இறக்கினால், பொருளாதார செலவு ஏற்படும்; சோதனைகளை தொண்டர்கள் சந்திக்க நேரிடும். அந்த மாபெரும் பொறுப்பை நானே ஏற்று, ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகிறேன்.

டவுட் தனபாலு: சாதாரண தொண்டர்களை தேர்தல்ல நிறுத்தி, அவங்களுக்கு செலவும் பண்ணி, தேர்தல்ல ஜெயிக்க வைக்கிறது உங்க தலைவி, ஜெ.,யின் வழக்கம்... பெரியகுளத்துல டீ கடை வச்சிருந்த உங்களை கூட அப்படித் தான் அரசியல்ல அடையாளப்படுத்துனாங்க. 'ஜெ., வழி வந்தவர்'னு சொல்லிக்கிற உங்களுக்கு, அந்த பரந்த மனம் இல்லாம போனது ஏன் என்ற, 'டவுட்' வருதே!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us