PUBLISHED ON : செப் 26, 2024 12:00 AM

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வளர்மதி: தமிழகத்தில்,பெண்களுக்கு எதிரானபாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இரண்டு மணி நேரத்திற்கு ஒரு பெண் பாலியல் தொந்தரவுக்கு ஆளாவதாக, புள்ளி விபரங்கள்தெரிவிக்கின்றன; இவற்றைக்கட்டுப்படுத்த முதல்வர் தவறி விட்டார். இவர்களுக்கு உரிய பாடம் கற்பிக்க வேண்டும்.அ.தி.மு.க., ஆட்சி அமைந்தால் தான், தமிழகத்தில் பெண்கள் மதிக்கப்படுவர்.
டவுட் தனபாலு: அ.தி.மு.க.,ஆட்சிக்கு வந்துட்டா, பெண்களுக்கு எதிரான குற்றங்களே நடக்காதா என்ன...? பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைகள், உங்க ஆட்சியில் தான் நடந்ததுஎன்பதை மறந்துட்டு பேசுறீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!
அகில இந்திய காங்., செய்தி தொடர்பாளர் பவன் கெரா: 'தலித் தலைவர்களை காங்., மதிப்பதில்லை' என அமித் ஷாகூறியுள்ளார். காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை பிரதமர் மோடி தொடர்ந்து அவமதித்து வருகிறார். பா.ஜ.,வின் வரலாற்றில், அக்கட்சிக்கு தலைமை வகித்த ஒரே ஒரு தலித் தலைவர் பங்காரு லஷ்மண் மட்டுமே. இவர்கள் எங்களுக்கு பாடம் நடத்தலாமா?
டவுட் தனபாலு: உங்க நெஞ்சை தொட்டு சொல்லுங்க...காங்., கட்சியில் எல்லா முடிவுகளையும் கார்கே தான் எடுக்கிறாரா... அவரது வீட்டில் நடக்கிற பல ஆலோசனைக் கூட்டங்கள்ல, எம்.பி., ராகுலும்கூடவே இருப்பது ஏன் என்ற, 'டவுட்'டுக்கு தங்களிடம் விளக்கம் இருக்குமா?
மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில செயலர் பாலகிருஷ்ணன்: சென்னையில் மட்டும், கடந்த இரண்டு மாதங்களில், மூன்று பேர் என்கவுன்டரால் கொல்லப்பட்டு உள்ளனர்;இது தற்செயலானதல்ல. குற்றவாளிகள் எனக் கருதப்படுவோருக்கு மரண தண்டனை விதிக்கும் அதிகாரத்தை, காவல்துறையினர் எடுத்துக் கொண்டிருப்பது கண்டனத்திற்கு உரியது.
டவுட் தனபாலு: கொடூர குற்றங்களில் ஈடுபட்டவங்களை பிடிக்க போகும் போலீசார் மேலயே தாக்குதல் நடத்தும் ரவுடிகளிடம், 'மறு கன்னத்தையும்காட்டிட்டு வரணும்'னு சொல்ல வர்றீங்களா என்ற, 'டவுட்' தான் வருது!

