/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
தலைமையாசிரியை, ஆசிரியர் இடமாற்றம்; தினமலர் செய்தி எதிரொலி
/
தலைமையாசிரியை, ஆசிரியர் இடமாற்றம்; தினமலர் செய்தி எதிரொலி
தலைமையாசிரியை, ஆசிரியர் இடமாற்றம்; தினமலர் செய்தி எதிரொலி
தலைமையாசிரியை, ஆசிரியர் இடமாற்றம்; தினமலர் செய்தி எதிரொலி
PUBLISHED ON : மார் 19, 2024 12:00 AM

மதுரை : திருமங்கலம் அரசு பெண்கள் பள்ளி தலைமையாசிரியை திலகவதி, முதுகலை ஆசிரியர் கர்ணன் ஆகியோர் இரு தரப்பாக செயல்பட்டனர். ஆசிரியர்களும் இவர்களின் ஆதரவாளர்களாக பிரிந்திருந்தனர். இந்நிலையில் இடைத்தேர்வு விடைத்தாளை ஆண் ஆசிரியர்களின் ஓய்வறையில் மாணவிகளை திருத்த வைத்ததாக கர்ணன் மீது தலைமையாசிரியை தரப்பு புகார் கூறியது. இதுகுறித்து தினமலர் செய்தி வெளியிட்டது.
இதன் எதிரொலியாக சி.இ.ஓ., கார்த்திகா விசாரணை நடத்தி இணை இயக்குநருக்கு அறிக்கை தாக்கல் செய்தார்.
இதையடுத்து திலகவதியை கள்ளிக்குடி அரசு மேல்நிலை பள்ளிக்கும், கர்ணனை கொட்டாம்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கும் இடமாற்றம் செய்து மேல்நிலை கல்வி இணை இயக்குநர் கோபிதாஸ் உத்தரவிட்டார்.