sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

தினமலர் பவள விழா

/

துணிச்சலுக்கு மறுபெயர் 'தினமலர்'

/

துணிச்சலுக்கு மறுபெயர் 'தினமலர்'

துணிச்சலுக்கு மறுபெயர் 'தினமலர்'

துணிச்சலுக்கு மறுபெயர் 'தினமலர்'


PUBLISHED ON : டிச 28, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : டிச 28, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எனது கல்லுாரி பருவத்தில் இருந்தே எனக்கு மிகவும் பிடித்த நாளிதழ் தினமலர் தான். இப்போதும் தினமும் நான் முதலில் படிப்பதும் இந்நாளிதழைத்தான். பரபரப்பு ஏற்படுத்தி, விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்ற ஒன்றையே தாரக மந்திரமாக கொண்ட பல பத்திரிகைகள் செய்திகளை திரித்தோ அல்லது திசை திருப்பியோ வெளியிடும் இன்றைய காலகட்டத்தில், உண்மையான செய்திகளை மட்டுமே தினமலர் வெளியிட்டு வருகிறது.

சினிமா செய்திகளை வெளியிட்டால் தான் பத்திரிகை விற்பனை அமோகமாக இருக்கும் என்ற தவறான எண்ணத்தை தவிடுபொடியாக்கி, தரமான செய்திகளை மட்டுமே வாசகர்கள் விரும்புவார்கள் என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகிறது தினமலர்.

ஆட்சியாளர்களுக்கும், அதிகார வர்க்கத்துக்கும் ஜால்ரா தட்டாமல், நடுநிலையோடு, எதற்கும் அஞ்சாமல் உண்மையை ஊருக்கு படம் பிடித்துக் காட்ட வேண்டும் என்ற தினமலர் நாளிதழின் உன்னத நோக்கத்தையும், அதீத துணிச்சலையும் கண்டு, பல நேரம் நான் வியந்து போய் இருக்கிறேன்.

நாட்டில் நடக்கும் அவலங்களை, துயரங்களை அஞ்சாமல் தோலுரித்துக் காட்டுவது தினமலர் நாளிதழின் இயல்பு. பல பத்திரிகைகள் இன்று கவர்ச்சி செய்திகளுக்கே முக்கியத்துவம் அளித்து வரும் நிலையில், அவை தொட அஞ்சும் செய்திகளை தனக்கே உரித்தான பாணியில் துணிவே துணை என்று வெளியிட்டு, வாசகர்களின் மனதில் தனக்கொரு தனியிடத்தை, முத்திரையை பதித்துள்ளது.

ஆட்சியாளர்கள் தவறு செய்யும் போதெல்லாம் தட்டிக் கேட்பதும், நல்லது செய்தால் பாராட்டுவதும் ஒரு பத்திரிகையின் முக்கிய கடமை. அதோடு, குரலற்றவர்களுக்காக குரல் கொடுத்து, அவர்களின் அவலத்தை போக்குவதும் ஒரு பத்திரிகையின் தலையாய பணியாக் இருக்க வேண்டும். இவற்றை, தினமலர் செவ்வனே செய்து வருகிறது. அதோடு தேச நலனுடனும், பற்றுதலுடனும் செய்திகளை வெளியிட்டு வருகிறது. தமிழனுக்கு ஒரு துயர் என்றால், ஓடோடி வருவதில் முன்னிலையில் நிற்பதும் இந்த இதழே.

நமது நாட்டின் இறையாண்மைக்கு கிஞ்சித்தும் பங்கம் ஏற்படாமல் செய்திகளை வெளியிடும் பாங்கு பாராட்டுக்குரியது. அன்று முதல் இன்று வரை, தினமலர் வளர்ச்சி மற்றும் நேர்த்தி; பக்கங்களின் வடிவமைப்பை கண்டு வியந்து வருபவன் நான்.

கோவை அருகே தென்திருமலையில் வெங்கடேச பெருமாள் கோவிலை நிர்மாணிக்கும் புனித பொறுப்பு எங்களுக்கு கிடைத்தது. அச்செய்தியை படங்களுடன் முழுப்பக்க அளவில் வெளியிட்டு, ஆன்மிகத்துக்கு தொடர்ந்து பக்கபலமாக நின்று வருவது 'தினமலர்'. மக்களை நல்வழிப்படுத்த ஆன்மிகமே சிறந்தது என்பதை தாரக மந்திரமாக போற்றுவதும் தினமலர் நாளிதழ் தான்.

நடுநிலை தவறாமல் உண்மை செய்திகளை மட்டுமே வெளியிடும் தினமலரின் பணி மேலும் சிறக்க எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

- கே.ஜி. பாலகிருஷ்ணன்

சேர்மன், கே.ஜி., குழுமம்






      Dinamalar
      Follow us